கங்குலியை முந்தவுள்ள கோலி: தோனியை முந்தி முதலிடம் பிடிப்பாரா?

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் போது முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை முந்தி 2-ஆம் இடம் பிடிக்கும் அரிய வாய்ப்பு விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ளது.
கங்குலியை முந்தவுள்ள கோலி: தோனியை முந்தி முதலிடம் பிடிப்பாரா?

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் போது முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை முந்தி 2-ஆம் இடம் பிடிக்கும் அரிய வாய்ப்பு விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்டு 1-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதில் பார்மிங்காமில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றால், முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் சாதனையை மிஞ்சும் அரிய வாய்ப்பு விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி 21 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. இதன்மூலம் அதிக டெஸ்ட் போட்டிகள் வென்ற இந்திய கேப்டன்களில் 2-ஆம் இடத்தில் உள்ளார். இதனிடையே 2017-ல் இந்திய அணியின் முழுநேர டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்ற பின்னர், இந்திய அணி வியத்தகு வெற்றிகளை குவித்து வருகிறது. மேலும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடமும் பிடித்தது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் 21 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. எனவே அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி தேடித் தந்த இந்திய கேப்டன்களில் விராட் கோலி, சௌரவ் கங்குலியுடன் 2-ஆம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வெற்றிபெற்றால் கூட 22 வெற்றிகளுடன் 2-ஆம் இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதிக வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ள டெஸ்ட் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை இத்தொடருக்குள் முறியடித்து முதலிடம் பிடிக்க முடியாத சூழல் உள்ளது. 

மொத்தம் 27 வெற்றிகளுடன் இந்த பட்டியலில் மகேந்திர சிங் தோனி, முதலிடத்தில் உள்ளார். ஒருவழியாக இங்கிலாந்து தொடரின் 5 போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றால் கூட விராட் கோலி தலைமையில் 26 வெற்றிகளைத்தான் பெற முடியும்.  எனவே தோனியின் சாதனையை கடந்து முதலிடம் பிடிக்க விராட் கோலிக்கு மேலும் சில காலம் தேவைப்படும். 

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகள் தேடித் தந்த கேப்டன்கள்:

கேப்டன்மொத்த வெற்றிஇந்தியாவெளிநாடு
மகேந்திர சிங் தோனி27216
விராட் கோலி21138
சௌரவ் கங்குலி211011

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com