மிதாலி ராஜ் அபாரம்: 27 ரன்களுக்கு மலேசியாவை சுருட்டி இந்தியா அசத்தல் வெற்றி

ஆசிய கோப்பையில் மலேசிய அணியை இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மிதாலி ராஜ் அபாரம்: 27 ரன்களுக்கு மலேசியாவை சுருட்டி இந்தியா அசத்தல் வெற்றி

ஆசிய கோப்பையில் மலேசிய அணியை இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியா, மலேசியா இடையிலான ஆசிய கோப்பை டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மான்ப்ரீத் கௌர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது.

சிறப்பாக ஆடிய அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ், 69 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரின் உதவியுடன் 97 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் நின்றார். இருப்பினும் கடைசி கட்டத்தில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

கேப்டன் ஹர்மான்ப்ரீத் கௌர் 23 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். மிதாலி, ஹர்மான் ஜோடி 53 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தது. 

பின்னர் 170 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மலேசியா 13.4 ஓவர்களில் 27 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியைச் சந்தித்தது. இதில் 6 பேர் டக்-அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி முதல் 5 ஓவர்களுக்குள்ளாக 12 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்தது.

இதர 5 பேரும் ஒற்றை இலக்க ரன்களுடன் ஆட்டமிழந்தனர். சாஷா ஆஸ்மி அதிகபட்சமாக 10 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தார். கேப்டன் வினிஃப்ரெட் துரைசிங்கம் 21 பந்துகளில் 5 ரன்களும், சுமிகா அஸ்மி 15 பந்துகளில் 4 ரன்களும் எடுத்தனர்.

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய பூஜா வஸ்த்ராகர் 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளும், பூணம் யாதவ் ரன்கள் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com