அதிக வருவாய் ஈட்டும் வீரர்கள் பட்டியல்: 83-வது இடத்தில் விராட் கோலி!

முதல் 100 வீரர்களில் இடம்பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரர், ஒரே கிரிக்கெட் வீரர்... 
அதிக வருவாய் ஈட்டும் வீரர்கள் பட்டியல்: 83-வது இடத்தில் விராட் கோலி!

சர்வதேச அளவில், அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிகை.

அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் 2018 என்கிற இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 83-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 100 வீரர்களில் இடம்பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரர், ஒரே கிரிக்கெட் வீரர் என்கிற பெருமைகளையும் அவர் பெற்றுள்ளார். விராட் கோலியின் வருமானம் - ரூ. 161 கோடி. 

இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளவர், அமெரிக்கக் குத்துச்சண்டை சாம்பியன், ஃபிளாய்ட் மேவெதர். இவருடைய கடந்தாண்டு வருமானம் - 1,907 கோடி.

முதல் 100 வீரர்களில் ஒரு வீராங்கனையும் இடம்பெறவில்லை. 

கடந்த வருடப் பட்டியலில் விராட் கோலி 89-வது இடத்தைப் பிடித்தார். அவர் ரூ.141 கோடி வருவாய் ஈட்டியதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com