உலகக் கோப்பை கால்பந்து 2018: அணிகள், நாள், நேரம் (இந்திய நேரப்படி)

வரும் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை ஒரு மாத காலம் ரஷியாவில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. 
உலகக் கோப்பை கால்பந்து 2018: அணிகள், நாள், நேரம் (இந்திய நேரப்படி)

வரும் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை ஒரு மாத காலம் ரஷியாவில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. 

துவக்க ஆட்டம்

14/6/2018
ரஷியா-சவுதி அரேபியா
நேரம்: இரவு 8.30.

15/6/18 (வெள்ளிக்கிழமை)
எகிப்து-உருகுவே, மாலை 5.30.
மொராக்கோ-ஈரான், இரவு 8.30.
போர்ச்சுகல்-ஸ்பெயின், இரவு 11.30.

16/6/18 (சனிக்கிழமை)
பிரான்ஸ்-ஆஸ்திரேலியா, மாலை 3.30.
ஆர்ஜென்டீனா-ஐஸ்லாந்து, மாலை 6.30.
பெரு-டென்மார்க், இரவு 9.30.

17/6/18 (ஞாயிற்றுக்கிழமை)
குரோஷியா-நைஜீரியா, அதிகாலை 12.30.
கோஸ்டா ரிகா-செர்பியா, மாலை 5.30.
ஜெர்மனி-மெக்ஸிகோ, இரவு 8.30.
பிரேசில்-சுவிட்சர்லாந்து, இரவு 11.30.

18/6/18 (திங்கள்கிழமை)
ஸ்வீடன்-தென்கொரியா, மாலை 5.30.
பெல்ஜியம்-பனாமா, இரவு 8.30.
துனிசியா-இங்கிலாந்து, இரவு 11.30.

19/6/18 (செவ்வாய்க்கிழமை)
கொலம்பியா-ஜப்பான், மாலை 5.30.
போலந்து-செனகல், இரவு 8.30.
ரஷியா-எகிப்து, இரவு 11.30.

20/6/18 (புதன்கிழமை)
போர்ச்சுகல்-மொராக்கோ, மாலை 5.30.
உருகுவே-சவுதி அரேபியா, இரவு 8.30.
ஈரான்-ஸ்பெயின், இரவு 11.30.

21/6/18 (வியாழக்கிழமை)
டென்மார்க்-ஆஸ்திரேலியா, மாலை 5.30.
பிரான்ஸ்-பெரு, இரவு 8.30.
ஆர்ஜென்டீனா-குரோஷியா, இரவு 11.30.

22/6/18 (வெள்ளிக்கிழமை)
பிரேசில்-கோஸ்டா ரிகா, மாலை 5.30.
நைஜீரியா-ஐஸ்லாந்து, இரவு 8.30.
செர்பியா-சுவிட்சர்லாந்து, இரவு 11.30.

23/6/18 (சனிக்கிழமை)
பெல்ஜியம்-துனிசியா, மாலை 5.30.
தென்கொரியா-மெக்ஸிகோ, இரவு 8.30.
ஜெர்மனி-ஸ்வீடன், இரவு 11.30.

24/6/18 (ஞாயிற்றுக்கிழமை)
இங்கிலாந்து-பனாமா, மாலை 5.30.
ஜப்பான்-செனகல், இரவு 8.30.
போலந்து-கொலம்பியா, இரவு 11.30.

25/6/18 (திங்கள்கிழமை)
சவுதி அரேபியா-எகிப்து, இரவு 7.30.
உருகுவே-ரஷியா, இரவு 7.30.
ஈரான்-போர்ச்சுகல், இரவு 11.30.
ஸ்பெயின்-மொராக்கோ, இரவு 11.30.

26/6/18 (செவ்வாய்க்கிழமை)
ஆஸ்திரேலியா-பெரு, இரவு 7.30.
டென்மார்க்-பிரான்ஸ், இரவு 7.30.
நைஜீரியா-ஆர்ஜென்டீனா, இரவு 11.30.
ஐஸ்லாந்து-குரோஷியா, இரவு 11.30.

27/6/18 (புதன்கிழமை)
மெக்ஸிகோ-ஸ்வீடன், இரவு 7.30.
தென்கொரியா-ஜெர்மனி இரவு 7.30.
சுவிட்சர்லாந்து-கோஸ்டா ரிகா, இரவு 11.30.
செர்பியா-பிரேசில், இரவு 11.30.

28/6/18 (வியாழக்கிழமை)
செனகல்-கொலம்பியா, இரவு 7.30.
ஜப்பான்-போலந்து, இரவு 7.30.
இங்கிலாந்து-பெல்ஜியம், இரவு 11.30.
பனாமா-துனிசியா, இரவு 11.30.

காலிறுதிக்கு முந்தைய ஆட்டம்
30/6/18 முதல் 3/7/18 வரை.


காலிறுதி ஆட்டங்கள்

6/7/18 (இரவு 7.30), 
7/7/18 (இரவு 11.30).

இறுதி ஆட்டம் : 15/7/18, இரவு 8.30.

பனாமா

மத்திய அமெரிக்க நாடான பனாமா முதன்முறையாக உலகக் கோப்பையில் இடம் பெற்றுள்ளது. முதன்முதலாக தகுதி பெற்ற நாள் தேசிய விடுமுறையாக  அறிவிக்கப்பட்டது. இறுதி தகுதி ஆட்டத்தில் கோஸ்டா ரிகாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பனாமா தகுதி பெற்றது. 40 லட்சம் மக்கள் தொகையே கொண்ட பனாமா, 32 கோடி மக்கள் தொகை கொண்டஅமெரிக்காவை காட்டிலும் சிறப்பாக ஆடி தேர்வாகியுள்ளது.நட்சத்திர வீரர் லூயிஸ் தேஜடா அணியின் தாக்குதல் ஆட்டக்காரரான லூயிஸ் இதுவரை 43 கோல்களை அடித்துள்ளார். அணிக்கு தூணாக லூயிஸ் விளங்குகிறார்.பயிற்சியாளர் ஹெர்னன் டாரியோ கோம்ஸ் கொலம்பியாவைச் சேர்ந்த ஹெர்னன் பனாமா அணிக்கு சிறப்பாக பயிற்சி அளித்துள்ளார். இவரது பயிற்சியில் கடந்த 1998-இல் கொலம்பியா ஏற்கெனவே சிறப்பாக ஆடியது. 2002-இல் ஈக்குவார் தனது முத்திரையை பதித்தது. தற்போது பனாமா முறையாகும்.


பெல்ஜியம்

சிறந்த ஆட்டத்திறனைக் கொண்டுள்ள பெல்ஜியம் அணி தனது இருப்பை வெளிப்படுத்தும் சரியான தருணமாக உலகக் கோப்பை 2018 அமைந்துள்ளது. இதுவரை அரையிறுதிச் சுற்றுக்கு கூட தகுதி பெறாத நிலையில் பெல்ஜியம் உள்ளது. முன்களத்துக்கு ரோமேலு லுகாகு, நடுக்களத்தில் ஈடன் ஹசார்ட், கோல்கீப்பர் தைபாட் கோர்டாஸ் ஆகியோர் அணியின் வெற்றிக்கு ஊன்றுகோலாக விளங்குகின்றனர். எனினும் தற்காப்பில் சிறிது கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வின்சென்ட் கொம்பனி, டோபி ஆல்டர், ஜன் வெர்டோன்ஜன் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர்.

நட்சத்திர வீரர் கெவின் டே புருயன்: கடந்த 2014 உலகக் கோப்பையிலேயே ஈடன் ஹசார்டை விட சிறப்பாக ஆடியவர் என்ற பெயரை கெவின் புருயன் பெற்றார். அவர் ஆட்டத்திந் போக்கையே மாற்றக்கூடிய திறனுடன் உள்ளார்.

பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ்: கடந்த 2016 யூரோ போட்டியில் அதிர்ச்சிகரமான தோல்விக்கு பின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராபர்டோ அணியின் சூழலுக்கு ஏற்ப தன்னை துரிதமாக மாற்றிக் கொண்டு சிறந்த கட்டுக்கோப்பான அணியை உருவாக்கி உள்ளார்.

முக்கிய வீரர்கள், நிலவரம்


இங்கிலாந்து 

ஓரே ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்ற (1966) இங்கிலாந்தில் கால்பந்து அதிக பிரபலமான விளையாட்டாகும். உலகின் அதிக பணம் புரளும் லீக் போட்டிகளை கொண்ட இங்கிலாந்து கடந்த 2014 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலும், 2016 யூரோவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறியது. தற்போது உலகக் கோப்பை போட்டிக்கு இளம் வீரர்கள் அதிகம் பேரை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளனர். 

நட்சத்திர வீரர் ஹாரி கேன்:

நிகழாண்டில் உலகின் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரராக உருவாகி உள்ள கேன் பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக்போட்டிகளில் தனது முத்திரையை பதித்தவர். 
இங்கிலாந்துக்காக இதுவரை 23 கோல்களை அடித்துள்ளார். பயிற்சியாளர் காரேத் செளத்கேட்: கடந்த 2016-இல் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற செüத்கேட், தைரியமான முடிவுகளை எடுப்பதில் வல்லவர்.


துனிசியா 

தகுதி ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காத துனிசியா தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. காங்கோ, லிபியா, கினியா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி 5-வது முறையாக துனிசியா தேர்வாகியுள்ளது. ஆனால் முதல் சுற்று ஆட்டங்களோடு துனிசியா வெளியேறி விடும். தற்போது வாபி கஸிரி, அயிமன் அப்தெனார், ஆகியோர் அணிக்கு பக்கபலமாக உள்ளனர்.

நட்சத்திர வீரர் யூசுப் சஹ்னி:

27 வயது முன்கள வீரரான சஹ்னி தகுதி ஆட்டங்களில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்தார். பயிற்சியாளர் நபில் மாலோல்: முன்னாள் பயிற்சியாளர் ரோகர் லெமராயின் கீழ் உதவி பயிற்சியாளராக மாலோல் பணிபுரிந்த போது, 2002-இல் ஆப்பிரிக்க கோப்பையை துனிசியா வென்றது. தகுதி ஆட்டங்களின் போது மாலோல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com