ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம்: இந்திய தொடரில் பங்கேற்பதில் சிக்கல்

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்திய தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம்: இந்திய தொடரில் பங்கேற்பதில் சிக்கல்

இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்பவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (வயது 35). இவருக்கு தற்போது ஏற்பட்டுள்ள தோள்பட்டை காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக ஆண்டர்சனுக்கு அதிகளவிலான தோள்பட்டை காயங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதை அவ்வப்போது தகுந்த சிகிச்சையால் சரிசெய்து வருகிறார். இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் தொடரில் மொத்தம் 223.3 ஓவர்கள் வீசியுள்ளார். இரு அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்கள் வீசிய ஓவர்களில் இதுவே அதிகம்.

இதனால் அவரின் காயம் தீவிரமடைந்துள்ளது. எனவே அடுத்த 6 வார காலத்துக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதுபோல சரியாக இதே இடைவேளைக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரும் தொடங்கவுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். எனவே, காயம் குணமாகும் வரை ஓய்வில் இருக்குமாறு இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸிஸ் தெரிவித்துள்ளார். 

வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com