ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஒருநாள் தொடரில் டேவிட் வார்னர் 'புது அவதாரம்' 

தடை செய்யப்பட்ட ஆஸ்திரேலிய துணைக் கேப்டன் வீரர் டேவிட் வார்னர்புது அவதாரம் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஒருநாள் தொடரில் டேவிட் வார்னர் 'புது அவதாரம்' 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் தடை செய்யப்பட்ட ஆஸ்திரேலிய துணைக் கேப்டன் வீரர் டேவிட் வார்னர் புது அவதாரம் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் மற்றும் கேப்டனாக டிம் பெய்ன் ஆகியோர் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தொடராக இது அமைந்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஜூன் 16-ல் கார்டிஃப்பில் நடைபெறும் 2-ஆவது போட்டியில் டேவிட் வார்னர் வர்ணனையாளராக இந்த புதிய அவதாரத்தை எடுக்கவுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் டேவிட் வார்னரை மக்கள் வில்லனாக நினைத்துவிட்டனர். ஆனால் அடுத்தவர்களைப் போன்று அவரும் இச்சம்பவங்களால் மனதளவில் நிறைய காயமடைந்துவிட்டார். கடந்த 10 ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் சிறந்த பேட்ஸ்மேனாக டேவிட் வார்னர் திகழ்கிறார். எனவே தான் அவரை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்துள்ளோம் என சேனல் 9 நிர்வாக இயக்குநர் டாம் மலோன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கனடாவில் ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் குளோபல் டி20 போட்டித் தொடரில் தடை செய்யப்பட்ட மற்றொரு வீரரான முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து டேவிட் வார்னர், வர்ணனையாளராக செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com