பர்தா அணிய வேண்டும் என்கிற நிபந்தனையால் செஸ் போட்டியிலிருந்து விலகிய இந்திய வீராங்கனை!

முகத்தை மூடும் உடையை அணிய வேண்டும் என்கிற ஈரான் அரசின் நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிய செஸ் போட்டியிலிருந்து..
பர்தா அணிய வேண்டும் என்கிற நிபந்தனையால் செஸ் போட்டியிலிருந்து விலகிய இந்திய வீராங்கனை!

முகத்தை மூடும் உடையை அணிய வேண்டும் என்கிற ஈரான் அரசின் நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிய செஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார் கிராண்ட் மாஸ்டர் செளம்யா சுவாமிநாதன். 

ஆசிய செஸ் போட்டி, ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை ஈரானில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி சார்பாக செளம்யா சுவாமிநாதனும் பங்குபெறுவதாக இருந்த நிலையில் திடீரென அவர் விலகியுள்ளார். இதுகுறித்த விளக்கத்தை ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

முகத்தை மூடும் உடையையோ பர்தாவையோ அணிய எனக்கு விருப்பமில்லை. ஈரானின் விதிமுறைகள் என்னுடைய தனி மனித உரிமையில் தலையிடுவதாக எண்ணுகிறேன். இதுபோன்ற போட்டிகளில் இந்திய அணியின் உடையை அணியச் சொல்வதன் காரணத்தைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் விளையாட்டில் மத ரீதியிலான உடைக்கு இடம் கிடையாது.

வீரர்களின் உரிமைகளுக்கும் நலனுக்கும் குறைந்தளவில் முக்கியத்துவம் அளிப்பது வருத்தத்தை அளிக்கிறது. என் உரிமையை நிலைநாட்ட ஒரே வழி, நான் ஈரானுக்குச் செல்லாமல் இருப்பதுதான். வங்கதேசத்தில் இந்தப் போட்டி முதலில் நடைபெறுவதாக இருந்தது. அதனால் தான் பங்குபெற  ஒப்புக் கொண்டேன். ஆனால் ஈரானுக்கு மாற்றப்பட்டுள்ளதால் விலகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. என்று தன் நிலையை அவர் விளக்கியுள்ளார். 

2016-ல் ஈரானில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றபோது இதே காரணங்களை முன்வைத்து இந்திய வீராங்கனை ஹீனா சித்து விலகினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com