உணவு இடைவேளைக்கு முன்பு அதிரடி சதம்: ஷிகர் தவன் நிகழ்த்திய சாதனைகள்!

முதல் பகுதியில் உணவு இடைவேளைக்கு முன்பு சதமெடுத்த ஆறாவது வீரர், முதல் இந்தியர் என்கிற பெருமையை...
உணவு இடைவேளைக்கு முன்பு அதிரடி சதம்: ஷிகர் தவன் நிகழ்த்திய சாதனைகள்!

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று தொடங்கியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சைனி, குல்தீப் யாதவ், கருண் நாயர், தாக்குர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்களான விஜய், தவன், ராகுல் ஆகிய மூவருமே இந்த ஆட்டத்தில் விளையாடுகிறார்கள்.

இன்று ஷிகர் தவன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 47 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். டி20 ஆட்டங்களில் ரன்கள் அதிகம் கொடுக்காமல் பந்துவீசும் ரஷித் கான், டெஸ்ட் போட்டியில் மிகவும் தடுமாறினார். முக்கியமாக ஷிகர் தவன், ரஷித் கானின் பந்துவீச்சைக் குறிவைத்துத் தாக்கினார். சிக்ஸரும் பவுண்டரிகளுமாக அடித்து வந்த ஷிகர் தவன், 87 பந்துகளில் சதத்தை எட்டினார். இதனால் முதல் நாளின் முதல் பகுதியில் உணவு இடைவேளைக்கு முன்பு சதமெடுத்த ஆறாவது வீரர், முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார். உணவு இடைவேளைக்குப் பிறகு யாமின் பந்துவீச்சில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் தவன்.

இந்த அதிரடி சதத்தின் மூலம் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ஷிகர் தவன்.

முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பு சதமடித்த வீரர்கள்

விக்டர் டிரம்பர், மான்செஸ்டர் 1902
சார்லி மெக்கர்ட்னே, லீட்ஸ் 1926
டான் பிராட்மேன், லீட்ஸ் 1930
மஜித் கான், கராச்சி 1976
டேவிட் வார்னர், சிட்னி 2017
ஷிகர் தவன், பெங்களூர் 2018 

முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பு அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

104 தவன், 2018
99 சேவாக் vs மே.இ., 2006
94 என்ஜினியர் vs மே.இ., 1967
91 சேவாக் vs இலங்கை, 2008
87 சேவாக் vs நியூஸிலாந்து, 2010

டெஸ்ட் ஆட்டத்தின் ஒரு பகுதியில் (session) 100+ ரன்கள்

பிராட்மேன் - 6 தடவை
தவன், டிரம்பர், ஹேமண்ட் - 3 தடவை

100 பந்துகளுக்குள் அதிக டெஸ்ட் சதங்கள்

6 - சேவாக்
3 - கபில் தேவ்
2 - தவன்/அசார்

உணவு இடைவேளைக்கு முன்பு அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

ஹார்திக் பாண்டியா vs இலங்கை - 108 ரன்கள் (2.30 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டது)
ஷிகர் தவன் vs ஆப்கானிஸ்தான் - 104 ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com