இந்திய டெஸ்ட் அணியில் அதிகம் இடம்பிடித்த 'தமிழக வீரர் அஸ்வின்' புது சாதனை!

இந்திய டெஸ்ட் அணியில் அதிகம் இடம்பிடித்த தமிழக வீரர் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் 4-ஆம் இடம் என அஸ்வின் புது சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் அதிகம் இடம்பிடித்த 'தமிழக வீரர் அஸ்வின்' புது சாதனை!

இந்திய டெஸ்ட் அணியில் அதிகம் இடம்பிடித்த வீரர் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் 4-ஆம் இடம் என அஸ்வின் புது சாதனைகளைப் படைத்துள்ளார்.

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வியாழக்கிழமை தொடங்கியது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.

இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. மேலும் இரண்டே நாட்களில் இந்தப் போட்டியும் நிறைவடைந்தது. அதிலும் குறிப்பாக 2-ஆம் நாள் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அணி இரு இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்துள்ளது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் களமிறங்கிய அஸ்வின், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தமிழக வீரர் என்கிற புது சாதனையைப் படைத்துள்ளார். முன்னாள் வீரர் வெங்கடராகவன் இந்திய அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 35 ஆண்டுகளாக இதுவே சாதனையாக உள்ளது. 

தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கியதன் மூலம் 58-ஆவது டெஸ்டில் அடியெடுத்து வைத்த அஸ்வின், இந்த சாதனையை முறியடித்துள்ளார். மற்றொரு தமிழக வீரர் முரளி விஜய், 57 டெஸ்டுகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளார்.

மேலும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் மற்றும் 2-ஆவது இன்னிங்ஸில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் அஸ்வின், 4-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.

அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்:

  • அனில் கும்ப்ளே - 132 டெஸ்ட் - 619 விக்கெட்டுகள்
  • கபில் தேவ் - 131 டெஸ்ட் - 434 விக்கெட்டுகள்
  • ஹர்பஜன் சிங் - 103 டெஸ்ட் - 417 விக்கெட்டுகள்
  • அஸ்வின் - 58 டெஸ்ட் - 314 விக்கெட்டுகள்
  • ஜாகீர் கான் - 92 டெஸ்ட் - 311 விக்கெட்டுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com