3 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணிக்கு திரும்பிய சுரேஷ் ரெய்னா!

சுரேஷ் ரெய்னா 3 வருட இடைவேளைக்குப் பின்னர் இந்திய அணியில் மீண்டும்இடம்பிடித்துள்ளார். 
3 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணிக்கு திரும்பிய சுரேஷ் ரெய்னா!

யோ யோ தேர்வில் அம்பத்தி ராயுடு தேர்ச்சி பெறாததால், மற்றொரு முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா 3 வருட இடைவேளைக்குப் பின்னர் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 

இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களுக்கு ஃபிட்னஸ் தொடர்பான யோ யோ தேர்வு பெங்களூருவில் உள்ள என்.சி.ஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அம்பத்தி ராயுடு தோல்வியடைந்தார். எனவே ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதனால் இந்திய ஒருநாள் அணியில் அவருக்கான மாற்று வீரரை பிசிசிஐ சனிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து 3 வருட இடைவேளைக்குப் பின்னர் சுரேஷ் ரெய்னா, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

கடைசியாக 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரெய்னா விளையாடினார். சமீபத்தில் இந்திய டி20 அணிக்கு திரும்பிய நிலையில், தற்போது ஒருநாள் அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

எனவே அடுத்து நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா மீண்டும் இடம்பிடிக்க தற்போது அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. பின்னர் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com