எகிப்தின் அடுத்த ஆட்டத்தில் விளையாடுகிறார் சலா

காயத்தால் அவதிப்பட்டு மீண்ட எகிப்தின் நட்சத்திர வீரர் முகமது சலா இரண்டாவது ஆட்டத்தில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காயத்தால் அவதிப்பட்டு மீண்ட எகிப்தின் நட்சத்திர வீரர் முகமது சலா இரண்டாவது ஆட்டத்தில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் தோளில் காயமடைந்தார். இதனால் அவரால் எகிப்து அணிக்காக உலகக் கோப்பையில் ஆடமுடியுமா என கேள்வி எழுந்தது. காயத்தில் இருந்து குணமடைந்த நிலையில் எகிப்து-உருகுவே இடையிலான முதல் ஆட்டத்தில் சலா விளையாடவில்லை. 
உருகுவே தோல்வியால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த சலா வரும் செவ்வாய்க்கிழமை 19-ஆம் தேதி ரஷியாவுடன் நடக்க உள்ள ஆட்டத்தில் 
விளையாடுவார் என எகிப்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com