கோல் அடித்த லுகாகு, மெர்டென்ஸ்
கோல் அடித்த லுகாகு, மெர்டென்ஸ்

உலகக் கோப்பைக்கு  கால்பந்து: பெல்ஜியம் அபாரம் (3-0): பனாமா தோல்வி

உலகக் கோப்பைக்கு முதல்முறையாக தகுதி பெற்ற பனாமா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அபார வெற்றி பெற்றது.பெல்ஜியம்-பனாமா அணிகள் இடையிலான குரூப் ஜி பிரிவு ஆட்டம்

உலகக் கோப்பைக்கு முதல்முறையாக தகுதி பெற்ற பனாமா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அபார வெற்றி பெற்றது.
பெல்ஜியம்-பனாமா அணிகள் இடையிலான குரூப் ஜி பிரிவு ஆட்டம் திங்கள்கிழமை இரவு சோச்சி பிஷ்ட் மைதானத்தில் நடைபெற்றது.
ரெட் டெவில்ஸ் எனப்படும் பெல்ஜியம் அணி கடந்த 1986 போட்டியில் அரையிறுதி வரை தகுதி பெற்றது. அதே நேரத்தில் 2014 உலகக் கோப்பை காலிறுதியில் 0-1 என ஆர்ஜென்டீனாவிடம் தோல்வியுற்றனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் பெல்ஜியம் வலிமை வாய்ந்த அணியாக உருவாகி உள்ளது பிஃபா பட்டியலில் 3-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய 9 ஆட்டங்களிலும் பெல்ஜியம் வென்றுள்ளது. பயிற்சியாளர் ராபர்டோ மார்ட்டினஸ் பயிற்சியில் சிறந்த நடுக்கள வீரர்கள் உடைய வலிமையான அணியாக உருவெடுத்துள்ளது.
அதே நேரத்தில் பனாமா அணி முதன்முறையாக உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. அதன் நட்சத்திர வீரரான கேப்டன் ரோமன்டாரஸை பெரிதும் நம்பி உள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டது பனாமா.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்தனர். பெல்ஜிய வீரர்கள் டி புருயன், ஈடன் ஹசார்ட், ரோமேலு லுகாகு ஆகியோர் தொடர்ந்து பனாமாவின் தற்காப்பு அரணை ஊடுருவி கோலடிக்க முயன்றனர். எனினும் முதல் பாதி முடியும் வரை எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை.
லுகாகு 2 கோல்கள்: இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் 47-வது நிமிடத்தில் டிரைஸ் மெர்டென்ஸ் அற்புதமாக கோலடித்தார். தொடர்ந்து பெல்ஜிய வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தால் 69-வது நிமிடத்தில் டி புருயன் அடித்த பந்தை தனது தலையால் முட்டி கோலாக்கினார் லுகாகு.
அதே போல் 75-வது நிமிடத்தில் ஹசார்ட் அடித்த பந்தை தடுத்து லுகாகு 2-வது கோலை அடித்தார். இதன் மூலம் பெல்ஜியம் 3-0 என முன்னிலை பெற்றது.
இதன் பின்னர் பனாமா அணி வீரர்கள் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இறுதியில் பெல்ஜியம் 3-0 என வென்று மூன்று புள்ளிகளை பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com