சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி அணியின் திறனை அறிய உதவும்

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இந்திய அணியின் திறனை அறிய ஒரு வாய்ப்பாக அமையும் என கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இந்திய அணியின் திறனை அறிய ஒரு வாய்ப்பாக அமையும் என கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறியுள்ளார்.
நெதர்லாந்தின் பிரெடா நகரில் வரும் 23 முதல் ஜூலை 1 வரை சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நடக்கிறது. நெதர்லாந்து, பாகிஸ்தான், ஆர்ஜென்டீனா, பெல்ஜியம், நடப்புச் சாம்பியன் ஆஸி., இந்தியா உள்ளிட்ட அணிகள் இதில் பங்கேற்கின்றன. வரும் டிசம்பரில் புவனேஸ்வரத்தில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடக்கிறது. அதற்கு முன்பு சாம்பியன்ஸ் கோப்பை நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறியதாவது:
கடந்த முறை போட்டியில் இரண்டாம் இடம் பெற்றிருந்தோம். ஆனால் தற்போது சூழல் மாறி விட்டது. இப்போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளோம். எனினும் அணியின் திறனை மதிப்பிட உதவும் போட்டியாக இது அமையும். வரும் 23-ஆம் தேதி பாகிஸ்தானுடன் முதல் ஆட்டத்தில் இந்தியா மோதுகிறது. வெற்றி பெறுவதே எங்களுக்கு முக்கியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com