இலங்கை கேப்டன் சண்டிமல், பந்தைச் சேதப்படுத்தியது எப்படி?: ஐசிசி வெளியிட்டுள்ள விடியோ!

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சண்டிமலுக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது...
இலங்கை கேப்டன் சண்டிமல், பந்தைச் சேதப்படுத்தியது எப்படி?: ஐசிசி வெளியிட்டுள்ள விடியோ!

இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. செயின்ட்லூசியாவில் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியினர் வெள்ளிக்கிழமை பந்தின் நிலையை மாற்ற முயன்றதாக நடுவர்கள் அலீம் தர், இயான் கெளட் ஆகியோர் புகார் செய்தனர். இதனால் சனிக்கிழமை 2 மணி நேரம் போட்டியில் பங்கேற்காமல் சண்டிமல் தலைமையில் இலங்கை அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததால் இலங்கை வீரர்கள் மீண்டும் ஆடத்தொடங்கினர். கடைசியில் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

ஐசிசி நடத்தை விதிகள் 2.2.9. மீறியதாக சண்டிமல் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸி. கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர், வீரர் பாங்கிராப்ட் ஆகியோர் மீது தடை விதிக்கப்பட்டதால் சண்டிமலுக்கு என்ன விதமான தடை விதிக்கப்படும் என்று கிரிக்கெட் உலகம் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் பிரச்னையை அணுகியது.

இந்நிலையில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சண்டிமலுக்கு ஒரு டெஸ்டில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்டில் சண்டிமலால் கலந்துகொள்ளமுடியாது.

இந்த விவகாரம் தொடர்பான விடியோவையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com