ஐசிசி நடவடிக்கையை எதிர்த்து தினேஷ் சண்டிமால் மேல்முறையீடு

பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் ஐசிசி நடவடிக்கையை எதிர்த்து இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், வியாழக்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார். 
ஐசிசி நடவடிக்கையை எதிர்த்து தினேஷ் சண்டிமால் மேல்முறையீடு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக கள நடுவர்கள் புகார் அளித்தனர். மேலும் மே.இ தீவுகள் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கி நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் (வயது 28), மீது நடத்தை விதி 2.2.9 மற்றும் பந்து விதி 41.3-ன் கீழ் ஒரு போட்டியில் விளையாடத் தடை, 100 சதவீத ஊதியம் ஆகியவற்றை அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலைியல், பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் ஐசிசி நடவடிக்கையை எதிர்த்து இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், வியாழக்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார். இதை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளது. மேலும் மே.இ.தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com