உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை: ஐசிசி வெளியிட்டது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை வெளியிட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை: ஐசிசி வெளியிட்டது


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை வெளியிட்டது.
9 தலைசிறந்த அணிகள் பங்கேற்கும் இந்த முதல் தொடர் 2019 ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி 2021 ஏப்ரல் 30-ஆம் தேதி முடிவடைகிறது. அதே போல் 13 அணிகள் (ஆடவர்) இடம் பெறும் சர்வதேச ஒரு நாள் லீக் போட்டிகளும் ஐசிசி உலகக் கோப்பைக்கு தகுதி ஆட்டமாக நடத்தப்படுகின்றன.
இரு ஆண்டுகள் நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஆறு தொடர்கள் (ஒன்று சொந்த நாட்டிலும், மற்றொன்று எதிரணியின் நாட்டிலும்) இடங்கள் இருதரப்பும் இணைந்து தேர்வு செய்தவற்றில் நடைபெறும். முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் 2021 ஜூன் மாதம் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் விளையாடும்.
13 அணிகள் லீக்: அதே நேரத்தில் 12 டெஸ்ட் விளையாடும் நாடுகள், நெதர்லாந்து பங்கேற்கும் 13 அணிகள் ஒரு நாள் லீக் போட்டியும் 2020 மே 1-ஆம் தேதி முதல் 2022 மார்ச் 31-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இரு ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் 8 தொடர்களை இரு தரப்பும் ஒப்புக் கொண்ட சொந்த மற்றும் எதிரணி நாட்டு மைதானத்திலும் விளையாடும்.
மேற்கிந்திய கரிபீயன் தீவுகளில் 2019 ஜூலையில் நடைபெறவுள்ள தொடக்க போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. அதே நேரத்தில் 2020 ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறும் ஒருநாள் லீக் போட்டித் தொடரில் இலங்கையுடன் போட்டித் தொடரில் மோதுகிறது. இந்த லீக் போட்டி 2023 ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கான தேர்வு போட்டியாகவும் அமையும். போட்டியை நடத்தும் நாடாக இந்தியா நேரடியாக தேர்வு பெறும். அதே நேரத்தில் ஒருநாள் லீக் தொடரில் முதல் 7 இடங்களைப் பெறும் அணிகளும் நேரடியாக 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.
அதே நேரத்தில் 8 முதல் 12 இடங்களில் உள்ள ஏனைய அணிகள் ஐசிசி உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் இரண்டாவது வாய்ப்பை பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com