ஐ-லீக் சீசனில் வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டம்

வரும் 2019-20 இந்தியன் கால்பந்து லீக் (ஐ-லீக்) சீசனில் அணிகளில் இடம் பெறும் வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கையை 6-இல் இருந்து 5 ஆக குறைக்க இந்திய கால்பந்து சம்மேளனம்
ஐ-லீக் சீசனில் வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டம்


வரும் 2019-20 இந்தியன் கால்பந்து லீக் (ஐ-லீக்) சீசனில் அணிகளில் இடம் பெறும் வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கையை 6-இல் இருந்து 5 ஆக குறைக்க இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) லீக் கமிட்டி திட்டமிட்டுள்ளது.
லீக் கமிட்டிக் கூட்டம் புதன்கிழமை தில்லியில் சம்மேளன மூத்த துணைத் தலைவர் சுப்ரதா தத்தா தலைமையில் நடைபெற்றது.
ஐ-லீக் போட்டிகளில் இடம் பெற்றுள்ள அணிகளில் ஒரு ஆசிய வீரர் உள்பட 6 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிய வீரர் இருக்க வேண்டும் என்னும் விதி நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 5 வெளிநாட்டு வீரர்களை அணிகள் வைத்துக் கொள்ளலாம்.
2018-19 சீசனுக்கு மட்டும் ஆசிய வீரர் இல்லாமலேயே 6 வெளிநாட்டு வீரர்களை அணிகள் ஒப்பந்தம் செய்யலாம். மேலும் கூட்டத்தில் ஐ லீக், ஏஐஎஃப்எஃப் யூத் லீக், 2-ஆம் டிவிஷன் லீக் போட்டிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. ஐ லீக் போட்டிகளுக்கு முன்பு அந்த அணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. ஆசியக்கோப்பை சாம்பியன் போட்டிகள் நடக்கும் போதும், ஐ லீக் போட்டிகள் நடக்கும். ஆனால் இந்திய அணி விளையாடும் தேதிகளில் ஐ லீக் போட்டிகள் நடக்காது. ஐ லீக் அணிகள் பங்கேற்புக்காக ரூ.45 லட்சம் மானியம் வழங்கப்படும்.
13, 15 வயது பிரிவுகளிலும் லீக் போட்டிகள் நடத்தப்படும். யூத் லீக் போட்டிகளில் ஓரே உரிமையாளர் பல அணிகளை வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com