குரூப் சி-இல் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் பிரான்ஸ்?: பெருவுடன் இன்று மோதல்

குரூப் சி பிரிவில் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் உள்ள பிரான்ஸ் வியாழக்கிழமை பெரு அணியுடன் மோதுகிறது.
குரூப் சி-இல் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் பிரான்ஸ்?: பெருவுடன் இன்று மோதல்

குரூப் சி பிரிவில் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் உள்ள பிரான்ஸ் வியாழக்கிழமை பெரு அணியுடன் மோதுகிறது.
தற்போது உலகக் கோப்பை 2018-இல் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் நிலையில் அந்த அணி ஏற்கெனவே ஆஸி. அணியை வென்று 3 புள்ளிகளுடன் உள்ளது. அதே பிரிவில் டென்மார்க் அணியும் 3 புள்ளிகளுடன் உள்ளது. 
வலுவான அணியாக கூறப்படும் பிரான்ஸ் தனது முதல் ஆட்டத்தில் ஆஸி. அணியுடன் போராடி தான் வெல்ல முடிந்தது. இதற்கிடையே ஏனைய ஜாம்பவான் அணிகளான ஆர்ஜென்டீனா, பிரேஸில் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. நடப்பு சாம்பியன் ஜெர்மனியோ, மெக்ஸிகோவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதனால் தனது பிரிவில் முதலிடம் பெறும் முனைப்பில் பிரான்ஸ் உள்ளது. 
இதற்கிடையே பெரு அணியுடன் பிரான்ஸ் மோதவுள்ளது. 
கடந்த 1982-இல் இரு அணிகளும் மோதிய நட்பு ஆட்டத்தில் பெரு 1-0 என வென்றிருந்தது. உலகக் கோப்பையில் தென் அமெரிக்க அணிகளில் கடைசியாக பிரான்ஸை வென்றது ஆர்ஜென்டீனா ஆகும் (1978). அதன் பின்னர் எந்த அணியும் வெல்லவில்லை. அதே நேரத்தில் பெரு கடந்த 7 உலகக் கோப்பைகளிலும் ஐரோப்பிய அணிகளுக்கு எதிராக வென்றதில்லை. 
பிரான்ஸில் பால் போக்பா, கிளியன் மாப்பே, ஆலிவர் ஜெரார்ட், உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். அதே நேரத்தில் பெரு அணி பாவ்லோ கியுரோ நட்சத்திர வீரராக திகழ்கிறார். இரு அணிகளில் பிரான்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com