நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது ரஷியா

எகிப்து அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ரஷிய அணி நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.
நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது ரஷியா

எகிப்து அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ரஷிய அணி நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.
குரூப் ஏ பிரிவில் ரஷியா-எகிப்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. ஏற்கெனவே துவக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வென்ற உற்சாகத்தில் ரஷிய அணி களம் கண்டது. 
அதே நேரத்தில் உருகுவேயுடன் தோல்வி, நட்சத்திர வீரர் சலா காயத்தால் சிக்கல் போன்ற தாக்கத்துடன் எகிப்து அணி களமிறங்கியது. முதன்முறையாக ரஷியாவும்-எகிப்தும் மோதின.
முகமது சலா களமிறங்கியும் எகிப்து அணியால் ரஷிய வீரர்களின் தாக்குதல் ஆட்டத்தை தடுக்க முடியவலில்லை. துவக்கம் முதலே ரஷிய முன்கள வீரர்கள் எகிப்தின் தற்காப்பு அரணை ஊடுருவி கோலடிக்க முயன்றனர். நட்சத்திர வீரர் சலா முதன்முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். 
ரஷிய வீரர்கள் அலெக்சாண்டர் கோலோவின், செரிஷேவ், ரோமன் úஸாபின் ஆகியோர் நீண்ட தூரத்தில் இருந்து கோலடிக்க முயன்று எகிப்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். முதல் பாதியில் எந்த அணியும் கோல்போடவில்லை. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியவுடன் 47-வது நிமிடத்தில் ரஷிய வீரர் úஸாபின் வலுவின்றி அடித்த பந்தைத் தடுக்க எகிப்து வீரர் அஹமது ஃபதி முயன்ற போது சேம்சேட் கோலானது. இதனால் 1-0 என ரஷியா முன்னிலை பெற்றது. 
தொடர்ந்து 59-வது நிமிடத்தில் ரஷிய வீரர் பெர்ணான்டஸ் அடித்த பந்தை நடுக்கள வீரர் டெனிஸ் செரிஷேவ் சரியாக பயன்படுத்தி கோலடித்தார். 
இது அவர் உலகக்கோப்பையில் போடும் 3-ஆவது கோலாகும். தொடர்ந்து 62-ஆவது நிமிடத்தில் மற்றொரு ரஷிய வீரர் குட்போவ் கடத்தித் தந்தை பந்தை முன்கள வீரர் அர்டெம் டையுபா அற்புதமாக கோலாக்கினார்.
இதனால் 3-0 என ரஷியா முன்னிலை பெற்றது. 73-வது நிமிடத்தில் ரஷிய வீரர் ஸிர்கோவ் எகிப்து வீரர் சலாவை தள்ளினார். ஆனால் நடுவர் பெனால்டி வாய்ப்பு தராமல் வெறும் பவுல் மட்டுமே வழங்கினார். 
இதையடுத்து விடியோ உதவி நடுவர் மூலம் சரிபார்க்கப்பட்டு எகிப்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது. 
முகமது சலா சரியாக கோலடித்தார். இறுதியில் ரஷியா 3-1 என்ற கோல் கணக்கில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
கடந்த 1966-இக்கு பின் ரஷியா அணி முதன்முறையாக தனது தொடக்க ஆட்டங்களில் 2-இல் ரஷியா வென்றுள்ளது. மேலும் 1934-இல் போட்டியை நடத்திய இத்தாலி அணி 8 கோல்களை அடித்திருந்தது. அதே போல் தற்போது போட்டியை நடத்தும் ரஷியாவும் அதை சமன் செய்துள்ளது. ரஷிய வீரர் செரிஷேவ், போர்ச்சுகல் வீரர் ரொனால்டோவுடன் இணைந்து இந்த உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 3 கோல்களை அடித்துள்ளார்.


ரொனால்டோ புதிய சாதனை
மொராக்கோவுடன் அடித்த கோல் மூலம் இந்த உலகக் கோப்பையில் 4 கோல்கள் அடித்து அதிக கோலடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கால்பந்தில் 85 கோல்கள் அடித்த
முதல் ஐரோப்பிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com