வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆர்ஜென்டீனா?

குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆர்ஜென்டீனாவும்-குரோஷியாவும் வியாழக்கிழமை இரவு நோவாகிராடில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.
வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆர்ஜென்டீனா?

குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆர்ஜென்டீனாவும்-குரோஷியாவும் வியாழக்கிழமை இரவு நோவாகிராடில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.
பலமான ஆர்ஜென்டீனா தனது தொடக்க ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திடம் டிரா மட்டுமே செய்ய முடிந்தது. நட்சத்திர வீரர் மெஸ்ஸியால் பெனால்டி கிக் வாய்ப்பைக் கூட கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் ஆர்ஜென்டீனாவுக்கு 1 புள்ளி மட்டுமே கிடைத்தது.
அதே நேரத்தில் குரோஷியா 2-0 என நைஜீரிய அணியை வீழ்த்தி உற்சாகத்துடன் ஆர்ஜென்டீனாவை எதிர்கொள்கிறது. குரூப் டி பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரு அணிகளும் 5 முறையாக மோதுகின்றன. 
இதில் ஆர்ஜென்டீனா 2, குரோஷியா 1 முறை வென்றன. மெஸ்ஸி ஏற்கெனவே 2 உலகக் கோப்பைகளில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டங்களில் கோலடித்துள்ளார்.
பட்டம் வெல்லும் அணி எனக் கருதப்படும் ஆர்ஜென்டீனா இந்த ஆட்டத்தில் வென்றால் தான் போட்டியில் நீடிக்க முடியும் என்பதால் குரோஷியாவுடன் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com