ஐபிஎல் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி ஏன்?: மெக்கல்லம் விளக்கம்!

ஐபிஎல் போட்டியின்போது நடைபெற்ற ஊக்கமருந்துப் பரிசோதனையில் தான் தோல்வியடைந்தது ஏன்....
ஐபிஎல் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி ஏன்?: மெக்கல்லம் விளக்கம்!

ஐபிஎல் போட்டியின்போது நடைபெற்ற ஊக்கமருந்துப் பரிசோதனையில் தான் தோல்வியடைந்தது ஏன் என்பதற்கு பிரபல வீரர் மெக்கல்லம் விளக்கம் அளித்துள்ளார்.

2016-ம் ஆண்டு குஜராத் - தில்லி அணிகளுக்கிடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி சார்பாக மெக்கல்லம் பங்கேற்றார். 36 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த மெக்கல்லம், ஆட்டம் முடிந்தபிறகு ஊக்கமருந்துப் பரிசோதனையில் கலந்துகொண்டார். 

மெக்கலமின் சிறுநீர் மாதிரிகளைச் சேகரித்த சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA), அதைச் சோதனை செய்தபோது சல்புடமோ வகை மருந்தை மெக்கல்லம் அதிகமாகப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.  மருத்துவக் காரணங்களுக்காக அல்லாமல் வேறு காரணங்களுக்காக இந்த மருந்தைப் பயன்படுத்தினால் அது விதிமுறைகளை மீறியதாகக் கருதப்படும். மெக்கல்லம், அந்த மருந்தை ஆஸ்துமா பிரச்னைக்காகப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார். பரிசோதனைகளின் முடிவுகளைக் கொண்டு மெக்கல்லமை அணுகியது பிசிசிஐ. ஸ்வீடனில் உள்ள தன்னாட்சி அதிகாரம் கொண்ட மருத்துவக்குழு, மெக்கல்லமுக்குச் சாதகமாகப் பதில் அளித்ததால் அவர் தண்டனை பெறாமல் தப்பித்தார்.

ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வியடைந்தது ஏன் என்பது பற்றி ஒரு பேட்டியில் மெக்கல்லம் கூறியதாவது:

பரிசோதனைகளின் முடிவுகள் வந்தபிறகு ஒவ்வொரு வழிமுறைகளையும் படிப்படியாகச் செய்து முடித்தோம். பிசிசிஐ இந்த விவகாரத்தில் நல்ல ஒத்துழைப்பு அளித்தது. ஊக்க மருந்துப் பரிசோதனையில் நான் தோல்வியடைந்ததாக நினைக்கவில்லை. எதனால் அந்த மருந்தைப் பயன்படுத்தினேன் என்கிற விளக்கம் அளிக்கவேண்டியிருந்தது. இந்தப் பரிசோதனைகளுக்கான வழிமுறையில் எனக்கு எவ்வித சங்கடமும் இல்லை. எனக்கு எவ்விதக் குற்ற உணர்ச்சியும் இல்லை என்று கூறியுள்ளார். 

கடந்த ஜனவரி மாதமே இந்தப் புகாரிலிருந்து மெக்கல்லமின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தப் பரிசோதனையில் தோல்வியடைந்ததால் உருவான வதந்திகளால் தற்போது தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் மெக்கல்லம். அவர் மேலும் கூறியுள்ளதாவது:

என் மனைவியிடம் சொன்னேன், இதில் மறைக்க எதுவும் இல்லை. மற்றவர்கள் பேசுவதை விடவும் நாமே பேசுவது நல்லது என்றேன். ஆகவே வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com