எங்கேயும் ஓடி ஒளிய முடியவில்லை: ஆஸ்திரேலியாவைக் கதற வைக்கும் இங்கிலாந்து பற்றி ஆரோன் ஃபிஞ்ச்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியையும் வென்று ஒருநாள் தொடரில் 4-0 என முன்னிலை பெற்றுள்ளது...
எங்கேயும் ஓடி ஒளிய முடியவில்லை: ஆஸ்திரேலியாவைக் கதற வைக்கும் இங்கிலாந்து பற்றி ஆரோன் ஃபிஞ்ச்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியையும் வென்று ஒருநாள் தொடரில் 4-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. 

நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் ஆரோன் ஃபிஞ்சும் மார்ஷும் சதமடித்தார்கள். ஃபிஞ்ச் 100, மார்ஷ் 101 ரன்களுடன் ஆட்டமிழந்தார்கள். தொடக்க வீரர் ஹெட் 63 ரன்கள் எடுத்தார். இப்படி முதல் மூன்று வீரர்கள் அருமையாக ஆடியதால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இங்கிலாந்தின் வில்லே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆனால், இந்த இலக்கை மிக எளிதாக எதிர்கொண்டது இங்கிலாந்து அணி. தொடக்க வீரர் ராய் 83 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். பேர்ஸ்டோவ் 79 ரன்களும் பட்லர் 29 பந்துகளில் 54 ரன்களும் எடுத்ததால் இங்கிலாந்து அணி, 44.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து அபார வெற்றி கண்டது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என முன்னிலை
பெற்றுள்ளது இங்கிலாந்து. 

ஆஸ்திரேலிய துணை கேப்டன் ஃபிஞ்ச் இந்தத் தோல்வி குறித்துக் கூறியதாவது: இங்கிலாந்து அணி ஆடும் விதம் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு அதிக அழுத்தத்தைத் தருகிறது. ஆக்ரோஷமாக விளையாடுகிறார்கள். எங்கள் பந்துவீச்சாளர்கள் இன்னமும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். குறைந்த வயதும் அனுபவமும் கொண்டவர்கள். கடந்த சில ஆட்டங்களாக ஒரே தவறுகளைத் தொடர்ந்து செய்கிறோம். உலகின் மிகச்சிறந்த அணியுடன் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம். எங்களால் எங்கேயும் ஓடி ஒளிய முடியவில்லை. ஒருநாள் ஆட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்பதில் இங்கிலாந்து அணி இதர அணிகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது. இப்போது எங்களுக்குக் கிடைக்கும் பாடங்கள் எங்கள் அணியின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com