உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டீனா அதிர்ச்சித் தோல்வி

அர்ஜெண்டீனா அணி 3-0 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடந்தது.
உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டீனா அதிர்ச்சித் தோல்வி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டீனா அணியும் குரோஷியாவும் வியாழக்கிழமை இரவு நோவாகிராடில் நடைபெறும் ஆட்டத்தில் மோதின.
இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டீனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடந்தது.
முன்னதாக அர்ஜெண்டீனா அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் மோதி ஆட்டத்தை டிரா  செய்ய 1 புள்ளி மட்டுமே கிடைத்திருந்தது.
எனவே  குரோஷியா உடனான இந்த ஆட்டத்தில் வென்றால் தான் போட்டியில் நீடிக்க முடியும் என்ற நிலையில் அர்ஜெண்டீனா அணி  ஆட்டத்தை துவங்கியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் குரோஷியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் பலமான அர்ஜெண்டீனா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முன்னதாகா குரோஷியா அணி  குரூப் டி பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com