நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ்

பெரு அணியை 1-0 என வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது முன்னாள் சாம்பியன் பிரான்ஸ். 2 தோல்விகளுடன் பெரு அணி வெளியேறியது.
வெற்றி கோலை அடித்த மாப்பே.
வெற்றி கோலை அடித்த மாப்பே.

பெரு அணியை 1-0 என வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது முன்னாள் சாம்பியன் பிரான்ஸ். 2 தோல்விகளுடன் பெரு அணி வெளியேறியது.
குரூப் சி பிரிவைச் சேர்ந்த பிரான்ஸ்-பெரு அணிகள் இடையிலான ஆட்டம் எகடெரின்பர்க் மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 
ஆட்டம் தொடங்கியது முதலே பிரான்ஸ் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டனர். இதற்கிடையே 23-வது நிமிடத்தில் மோசமானஆட்டத்துக்காக பெரு கேப்டன் பாவ்லோ கியுரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 34-வது நிமிடத்தில் பிரான்ஸ் நடுக்கள ஆட்டக்காரர் கிளியன் மாப்பே முதலாவது கோலை அடித்தார். அன்டைன் கிரைஸ்மேன் அடித்த பந்தை ரமோஸ் தடுக்க முயன்றபோது குறுக்கிட்டு மாப்பே கோலாக்கினார். முதல் பாதி ஆட்ட நிறைவில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை வகித்தது.
இதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோலடிக்க தீவிரமாக முயன்றும் தோல்வியுற்றனர். 
ஆட்டத்தின் பெரும்பகுதி பந்து பெரு அணியின் கட்டுப்பாட்டில் இருந்தும் அவர்கலால் கோலடிக்க முடியவில்லை. 
இறுதியில் 1-0 என வெற்றி பெற்று பிரான்ஸ் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. பிரான்ஸைத் தொடர்ந்து குரூப் சி பிரிவில் இருந்து டென்மார்க் அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ளது.
குரூப் சி பிரிவில் 6 புள்ளிகளுடன் பிரான்ஸ் முதலிடமும், 4 புள்ளிகளுடன் டென்மார்க் இரண்டாம் இடமும் வகிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com