நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் பிரேஸில்

கோஸ்டா ரிகா அணியை வென்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அதற்கான முனைப்புடன் பிரேஸில் போராடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தீவிர பயிற்சியில் நெய்மர் மற்றும் பிரேஸில் வீரர்கள்.
தீவிர பயிற்சியில் நெய்மர் மற்றும் பிரேஸில் வீரர்கள்.

கோஸ்டா ரிகா அணியை வென்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அதற்கான முனைப்புடன் பிரேஸில் போராடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
5 முறை சாம்பியன் பிரேஸில் அணி தனது முதல் ஆட்டத்தில் வலு குறைந்த சுவிட்சர்லாந்து அணியுடன் 1-1 என டிரா செய்தது. நட்சத்திர வீரர் நெய்மர் உள்பட வீரர்களுடன் பலமான அணியாக இருந்தும் வெற்றி பெற முடியாதது அதற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது 1 புள்ளியுடன் மட்டுமே உள்ள பிரேஸில் வெள்ளிக்கிழமை கோஸ்டா ரிகா அணியோடு மோதுகிறது. இதில் வென்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதே நேரத்தில் காயத்தால் பாதிக்கப்பட்டு குணடைந்த நெய்மர் பழைய பார்மில் இல்லாததும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மருக்கு எதிராக 10 பவுல்கள் செய்யப்பட்டன. 
கோஸ்டா ரிகா அணி கடந்த 2014 போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் தனது முதல் ஆட்டத்தில் செர்பியாவிடம் தோல்வியைத் தழுவியது. எனினும் பிரேஸிலுடன் நடைபெறும் ஆட்டத்தில் ஏதாவது அதிரடியை செய்ய முடியும் என அந்த அணி வீரர்கள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த போட்டியில் பிரேஸில் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com