யோ யோ விவகாரம்: ஊடகங்கள் மீது ரோஹித் ஷர்மா காட்டம்

யோ யோ தேர்வு குறித்த ஊடகங்களின் விமர்சனங்களுக்கு, தீர ஆராய்ந்து விட்டு செய்தி வெளியிடுமாறு ரோஹித் ஷர்மா கடுமையாகச் சாடியுள்ளார்.
யோ யோ விவகாரம்: ஊடகங்கள் மீது ரோஹித் ஷர்மா காட்டம்

இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கான ஃபிட்னஸ் தொடர்பான யோ யோ தேர்வு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்றது. ரஷியாவில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்த தேர்வில் பங்கேற்க அவகாசம் அளிக்குமாறு ரோஹித் ஷர்மா, பிசிசிஐ-க்கு கோரிக்கை வைத்தார். 

இதனிடையே ரோஹித் ஷர்மா ஃபிட்னஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் இந்திய அணியின் துணைக் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே நியமிக்கப்பட்டார்.

இருப்பினும் ஜூன் 20-ல் நடத்தப்பட்ட யோ யோ தேர்வில் ரோஹித் ஷர்மா தேர்ச்சியடைந்தார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். எனவே இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் ரோஹித் இடம் உறுதியானது.

இந்நிலையில், யோ யோ தேர்வு குறித்த ஊடகங்களின் விமர்சனங்களுக்கு, தீர ஆராய்ந்து விட்டு செய்தி வெளியிடுமாறு ரோஹித் ஷர்மா கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

எனது தனிப்பட்ட வாழ்வு குறித்து விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. இந்திய கிரிக்கெட் அணிகளின் விதிகளுக்கு உட்பட்டு எனது தனிப்பட்ட நேரங்களை செலவிட எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது. யோ யோ தேர்வில் பங்கேற்க எனக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. 

ஊடக நிறுவனங்கள் உண்மைச் செய்திகள் குறித்து விவாதிக்கலாம். ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்னதாக, அதுகுறித்து முழு விவரங்களையும் தீர ஆராய்ந்து, உண்மை நிலையை வெளியிடுவது சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com