ஸ்பெயினிடம் தோற்றது ஈரான்

குரூப் பி பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினிடம் 1-0 என ஈரான் தோல்வியடைந்தது.
வெற்றிக் கோலை அடித்த ஸ்பெயின் வீரர் டிகோ கோஸ்டா.
வெற்றிக் கோலை அடித்த ஸ்பெயின் வீரர் டிகோ கோஸ்டா.

குரூப் பி பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினிடம் 1-0 என ஈரான் தோல்வியடைந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே நட்சத்திர வீரர்களைக் கொண்ட ஸ்பெயின் அணி தொடர்ந்து தாக்குதல் பாணியைக் கடைபிடித்தது. எனினும் ஈரானின் தற்காப்பு அரணை ஊடுருவி கோலடிக்க முடியவில்லை.
ஸ்பெயின் அணியின் கோலடிக்கும் முயற்சிகளை ஈரான் தடுப்பாட்டக்காரர்கள் முறியடித்தனர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியவுடன் பெயர்ன்வாட் இருமுறை கோலடிக்க முயன்றும் முடியவில்லை. ஈரான் வீரர் மெஹ்தி தரேமி அடித்த பந்து ஸ்பெயின் கோல்கம்பம் மீது சென்று விட்டது.
54-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டீகோ கோஸ்டா அற்புதமாக கோலடித்தார். இதன் மூலம் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. இதன் பின்னர் ஈரான் அணி வீரர்கள் சமன் செய்ய தீவிரமாக முயன்றும் அவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை. இந்த உலகக் கோப்பையில் கோஸ்டா அடிக்கும் மூன்றாவது கோலாகும்.
அதே நேரத்தில் ஈரான் வீரர் சயித் ஈதோலாஹி கோலடித்தார். ஆனால் வார் விடியோ உதவி நடுவர் முறையில் அதை சரிபார்த்த போது, ஆஃப்சைட் என அறிவிக்கப்பட்டது ஈரான் வீரர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. 
இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் 3 புள்ளிகளைப் பெற்றது. குரூப் பி பிரிவில் போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகியவை 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன. ஈரான் 3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மொராக்கோ போட்டியில் இருந்து வெளியேறி விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com