டிஎன்பிஎல் 2018 சீசனில் ஸ்பெக்டாகாம் தொழில்நுட்பம் அறிமுகம்

டிஎன்பிஎல் 2018 சீசனில் பேட்டிங் தரத்தை கண்காணிக்க உதவும் ஸ்பெக்டாகாம் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டிஎன்பிஎல் 2018 சீசனில் ஸ்பெக்டாகாம் தொழில்நுட்பம் அறிமுகம்

டிஎன்பிஎல் 2018 சீசனில் பேட்டிங் தரத்தை கண்காணிக்க உதவும் ஸ்பெக்டாகாம் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வரும் ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை டிஎன்பிஎல்-இந்தியா சிமெண்ட்ஸ் போட்டிகள் சென்னை-திருநெல்வேலி, திண்டுக்கல் மைதானங்களில் நடக்கிறது.
இவற்றில் ஸ்பெக்டாகாம் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலமாக ஒரு வீரரின் பேட்டிங் வேகம், திறன் மற்றும் பேட்டில் சரியான இடத்தில் பந்து பட்டதா போன்ற விவரங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும். இந்ததொழில்நுட்பத்தை முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுதொடர்பாக கும்ப்ளே கூறியதாவது: இத்தொழில்நுட்பம் செயல்படும் விதம் எளிமையானது. சென்சார் பொருத்தப்பட்ட ஸ்டிக்கரை குறிப்பிட்ட கிரிக்கெட் வீரரின் பேட்டில் ஒட்டி விடுவோம். இதன் மூலம் அது ஸ்மார்ட் பேட்டாக மாறும். அதன் செயல்பாட்டை எளிதாக கண்காணிக்கலாம் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
டிஎன்பிஎல் போட்டிகள் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை தந்துள்ளது. வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் இந்திய அணியிலும் இடம் பெறுகின்றனர். டி 20 போட்டிகளால் வீரர்கள் உடல்தகுதி, பீல்டிங் செய்யும் திறனை மேம்படுத்த வேண்டியுள்ளது. சிறந்த முறையில் பீல்டிங் செய்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடலாம்.
சிறு நகரங்கள், கிராமங்களுக்கும் கிரிக்கெட்டை கொண்டு செல்ல வேண்டும். டி 20 போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும் முறையை கணிக்க முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com