துளிகள்...

மாநிலங்களிடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வட்டு எறிதல் வீராங்கனை சீமா புனியா, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

*சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சந்தீப் செஜ்வால் ஆடவருக்கான 50 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தங்கம் வென்றார்.
*உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஏடிபி ஃபெர்கானா சேலஞ்ஜர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தகுதிச்சுற்றில் தோற்று வெளியேறினார்.
*மாநிலங்களிடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வட்டு எறிதல் வீராங்கனை சீமா புனியா, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
*தில்லியில் நடைபெறும் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ராணுவ அணி வீரர் செயின் சிங் 3 பொசிஷன்ஸ் பிரிவில் தங்கம் வென்றார்.
*2016 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது தாம் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததாக தெரிவித்துள்ள நியூஸிலாந்தின் பிரென்டன் மெக்கல்லம், ஆஸ்துமா பிரச்னை காரணமாக பயன்படுத்திய மருந்து காரணமாகவே அது நிகழ்ந்ததாகவும், பின்னர் விலக்களிக்கப்பட்டு தாம் விளையாட அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
*ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்-குரோஷியாவின் போர்னா கோரிச் ஆகியோர் மோதுகின்றனர்.
*குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்-குரோஷியாவின் மரின் சிலிச் மோதுகின்றனர்.
*ஹாங்காங்கில் நடைபெற்ற ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய டென்னிஸ் வீராங்கனை கர்மான் தன்டி கெüர் பட்டம் வென்றார். ஒற்றையர் பிரிவில் இது அவரது முதல் பட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com