இங்கிலாந்து கோல் மழை (6-1)

நோவாகிராட், ஜூன் 24: பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 6-1 என கோல்மழை பொழிந்தது.
இங்கிலாந்து கோல் மழை (6-1)

நோவாகிராட், ஜூன் 24: பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 6-1 என கோல்மழை பொழிந்தது.
 குரூப் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து- பனாமா அணிகள் மோதும் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நோவாகிராடில் நடைபெற்றது
 இரு அணிகள் சந்திக்கும் முதல் ஆட்டம் இதுவாகும். இங்கிலாந்து அணி தனது துவக்க ஆட்டத்தில் துனிசியாவை எளிதாக வீழ்த்தியது. அதே நேரத்தில் பெல்ஜியத்திடம் 3-0 என பனாமா கடும் தோல்வியை சந்தித்தது. இந்த பிரிவில் பெல்ஜியம், இங்கிலாந்து 3 புள்ளிகளுடன் உள்ளன.
 அரபு நாடுகளில் சவுதி அரேபியா, மொராக்கோ, எகிப்து உள்ளிட்டவை வெளியேறி விட்டன. இறுதியாக துனிசியா மட்டுமே களத்தில் உள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற துனிசியா 2 ஆட்டங்களில் வெல்ல வேண்டும். அதே நேரத்தில் இங்கிலாந்து இதில் வென்றாலே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி விடும்.
 இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டன.
 8-வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டிரிப்லர் அனுப்பிய பந்தை ஜான் ஸ்டோன்ஸ் அற்புதமாக கோலாக்கினார். 22-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பின் மூலம் கேப்டன் ஹாரி கேன் கோலடித்தார். 36-வது நிமிடத்தில் ஜெஸ்ஸி லின்கார்டும், 40-வது நிமிடத்தில் ஜான் ஸ்டோன்ஸýம் கோலடித்தனர்.
 45-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி தனது இரண்டாவது கோலை அடித்தார் கேப்டன் ஹாரி.
 இதன் மூலம் ஆட்டத்தின் முதல் பாதி நிறைவில் இங்கிலாந்து 5-0 என முன்னிலை பெற்றிருந்தது. முதல் பாதியில் 4 கோல்களுக்கு மேல் அடிப்பது இங்கிலாந்துக்கு இதுவே முதன்முறையாகும்.
 பனாமாவுக்கு ஆறுதலாக 78-வது நிமிடத்தில் அந்த அணியின் அவில்லா அனுப்பிய பந்தை பெலிப் பலோய் சிறப்பாக கோலடித்தார். இது உலகக் கோப்பையில் அந்த அணியின் முதலாவது கோலாகும். இறுதியில் 6-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. பனாமா போட்டியை விட்டு வெளியேறியது. பெரிய போட்டியில் இங்கிலாந்து இத்தகைய அபார வெற்றி பெறுவது முதன்முறையாகும்.
 குரூப் ஜி பிரிவில் ஏற்கெனவே பெல்ஜியம் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி விட்டது. துனிசியா, பனாமா வெளியேறின.
 ஹாரி கேன் ஹாட்ரிக்
 இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் 62-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் லாப்டஸ் சீக் கடத்தி அனுப்பிய பந்தை அற்புதமாக கோலாக்கினார் கேப்டன் ஹாரி கேன். இதன் மூலம் ஹாரி கேன் ஹாட்ரிக் கோலடித்தார். 1966-இல் ஜியாப் ஹர்ஸ்ட், 1986-இல் கேரிலினேகர் ஆகியோர் ஹாட்ரிக் அடித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com