100-ஆவது டி20-யில் இந்தியா: புதிய சாதனைப் படைக்க விராட் கோலிக்கு அரிய வாய்ப்பு!

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, புதிய சாதனைப் படைக்கும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
100-ஆவது டி20-யில் இந்தியா: புதிய சாதனைப் படைக்க விராட் கோலிக்கு அரிய வாய்ப்பு!

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, புதிய சாதனைப் படைக்கும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தனது 100-ஆவது டி20 போட்டியில் களமிறங்குகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் இந்திய கேப்டன் விராட் கோலி, 2,000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் மற்றும் உலகளவில் 3-ஆவது வீரர் எனும் சாதனையைப் படைப்பார். இந்த சாதனைக்கு இன்னும் 17 ரன்கள் மட்டுமே தேவை. மேலும் டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த முதல் வீரர் ஆவார்.

அதுமட்டுமல்லாமல் டி20-யில் வேகமாக ஆயிரம் ரன்களைக் கடந்தவரும் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிரண்டன் மெக்கல்லம் 67 போட்டிகளிலும், மார்டின் கப்டில் 73 போட்டிகளிலும் 2 ஆயிரம் ரன்களைக் கடந்து முதல் இரு இடங்களில் உள்ளனர். 

கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டி20-யில் விளையாடிய உமேஷ் யாதவ், அதன் பின்னர் இந்திய அணி விளையாடிய 65 டி20 ஆட்டங்களிலும் பங்கேற்றதில்லை (இப்போட்டி உட்பட) என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com