டி20: அஸ்வின் சாதனையைத் தாண்டிய யுவேந்திர சாஹல்!

டி20 ஆட்டங்களில் அதிகமுறை 3 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களில், அஸ்வினைத் தாண்டியுள்ளார் சாஹல்...
டி20: அஸ்வின் சாதனையைத் தாண்டிய யுவேந்திர சாஹல்!

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் சமீபகாலமாக அஸ்வின், ஜடேஜாவுக்குப் பதிலாக யுவேந்திர சாஹலும் குல்தீப் யாதவும் இடம்பெற்று வருகிறார்கள். இந்நிலையில் அஸ்வினின் ஒரு டி20 சாதனையை யுவேந்திர சாஹல் தாண்டியுள்ளார்.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 97, தவன் 74 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து ஆடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களே எடுத்து வீழ்ந்தது. இதனால் இந்திய அணி, 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் சாஹல் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

டி20 ஆட்டங்களில் அதிகமுறை 3 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களில், அஸ்வினைத் தாண்டியுள்ளார் சாஹல். 46 ஆட்டங்களில் 5 முறை 3 மற்றும் அதற்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அஸ்வின். ஆனால் நேற்று மூன்று விக்கெட்டுகள் எடுத்த சாஹல், அஸ்வினைத் தாண்டி முதலிடம் பிடித்துள்ளார்.

டி20 ஆட்டங்களில் அதிகளவில் 3+ விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள்

சாஹல் - 22 ஆட்டங்கள் - 6 தடவை
அஸ்வின் - 46 ஆட்டங்கள் - 5 தடவை
நெஹ்ரா - 27 ஆட்டங்கள் - 4 தடவை
இர்ஃபான் பதான் - 4 ஆட்டங்கள் - 4 தடவை
யுவ்ராஜ் சிங் - 58 ஆட்டங்கள் - 4 தடவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com