மார்ஷ் 96 ரன்கள்; ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 351 ரன்கள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்கள் எடுத்துள்ளது...
மார்ஷ் 96 ரன்கள்; ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 351 ரன்கள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா அணி அந்நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 76 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. மார்ஷ் 77 பந்துகளில் 32 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டிம் பைன் 51 பந்துகளில் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் 2-ம் நாளான இன்று பைன் 25 ரன்களில் வெளியேறினார். கம்மின்ஸ் 3 ரன்களில் வெளியேற ஸ்டார்க் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 300 ரன்களைத் தாண்ட உதவினார். அவர் மஹாராஜ் பந்துவீச்சில் வெளியேறினார்.

ஆறாவதாகக் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் சிறப்பாக விளையாடி, 173 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்து சதமெடுக்க முடியாமல் ஆட்டமிழந்தார். கடைசியாக லயன் 12 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 110.4 ஓவர்களில் 351 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் மஹாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com