தோனியிடம் கற்க விரும்புகிறேன்: சிஎஸ்கே-வுக்கு தேர்வான மார்க் உட் பேட்டி

தோனியிடம் இருந்து கற்க விரும்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தேர்வான இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட் தெரிவித்துள்ளார்.
தோனியிடம் கற்க விரும்புகிறேன்: சிஎஸ்கே-வுக்கு தேர்வான மார்க் உட் பேட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு நட்சத்திரமாக உருவாகி வரும் மார்க் உட், வருகிற ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 1.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இங்கிலாந்தின் டர்ஹாம் நகரைச் சேர்ந்த உட், 140 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடியவர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் சிறப்பாக பந்துவீசி ஜொலித்தார். இவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்கவின் லுங்கி நிகிடி மற்றும் இந்தியாவின் ஷர்துல் தாக்கூர் ஆகிய இளம் வேகப்பந்துவீச்சாளர்களும் விளையாடவுள்ளனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியளிப்பதாக மார்க் உட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். ஐபிஎல் என்றில்லாமல் உலகிலேயே சிறந்த அணியில் இடம்பிடித்து விளையாடுவதை யார் வேண்டாம் என்று சொல்வார்கள். அவ்வகையில் நான் அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன். 

அதுபோல எனது அணியை வெற்றிபெற வைக்க நான் நிச்சயம் துணை நிற்பேன். அதிலும் மகேந்திர சிங் தோனியுடன் விளையாடுவது மிகச்சிறப்பானதாகும். ஏனென்றால் ஒவ்வொரு போட்டியின் போதும் ஒரு வீரருக்கு கடும் சவால்கள் காத்திருக்கும். அதை எதிர்கொள்ள தனித்திறமை வேண்டும். 

எல்ல நேரங்களும் நமக்கு சாதகமாக அமையாது. அதுபோன்ற கடுமையான சூழ்நிலைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து தோனியின் வழிகாட்டுதல் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். தோனி எனது கேப்டனாக இருப்பதன் மூலம் நான் இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க கற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் இவற்றை சரியாக எதிர்கொள்ளும் நிலை குறித்து அவரின் வழிகாட்டுதல் சிறப்பானது.

மேலும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் இருந்து ஸ்லோ பால் ரக பந்துவீச்சு முறையை நேர்த்தியாக வீசுவது தொடர்பாக கற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com