மகளிர் ஹாக்கி: 3-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது இந்தியா

மகளிர் ஹாக்கி போட்டியில் வலுவான கொரியா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
மகளிர் ஹாக்கி: 3-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது இந்தியா

மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய, கொரியா அணிகள் இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் வலுவான கொரியா அணியை இந்தியா அபாரமாக வீழ்த்தியது.

போட்டி தொடங்கிய 2-ஆவது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை குருஜித் கௌர் அற்புதமாக கோல் அடித்து இந்திய அணியின் கணக்கை துவக்கி வைத்தார். பின்னர் 14-ஆவது நிமிடத்தில் தீபிகா 2-ஆவது கோலை பதிவு செய்தார்.

இதையடுத்து இந்திய அணி கொரியாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. மேலும் சிறப்பான தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தியதால் கொரிய வீராங்கனைகள் கோல் அடிக்க முடியாமல் திணறினர். 

இந்நிலையில், 47-ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை பூணம் ராணி ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அசைக்க முடியாத முன்னிலைப் பெற்றது. கடைசியாக கொரிய வீராங்கனை மீ ஹியூன் பார்க் 57-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு ஆறுதல் கோல் அடித்தார்.

இதனால் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com