ஆசிய வில்வித்தை: இந்தியாவுக்கு 3 தங்கம்

ஆசிய கோப்பை வில்வித்தையின் '1-ஆம் நிலை' போட்டியில் இந்தியா 3 தங்கம், 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றது

ஆசிய கோப்பை வில்வித்தையின் '1-ஆம் நிலை' போட்டியில் இந்தியா 3 தங்கம், 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றது.
இதில் மகளிருக்கான தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் பிரமிளா டெய்மேரி 7-3 என்ற கணக்கில் ரஷியாவின் நடாலியா எர்டைனீவாவை வீழ்த்தி தங்கம் வென்றார். ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ், கோரா ஹோ, கெளரவ் லம்பே அணி 27-26 என்ற கணக்கில் மங்கோலிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.
முன்னதாக, மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் முஸ்கான் கிரார் 139-136 என்ற கணக்கில் மலேசியாவின் நதிரா ஜகாரியா சஸாதுலை வீழ்த்தி புதன்கிழமை தங்கப் பதக்கம் வென்றார்.
இதேபோல், மது வேத்வான் 6-5 என்ற கணக்கில் மங்கோலியாவின் அல்டாங்கெரல் எங்துயாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார். மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் முஸ்கான் கிரார்-திவ்யா தயால்-மிருனாள் ஹிவ்ராலே ஆகியோர் அடங்கிய இந்திய அணி 227-221 என்ற கணக்கில் இந்தோனேஷிய அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.
இதனிடையே, தங்கம் வென்ற முஸ்கான் கிராருக்கு மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தலைவர் சீதாசரண் சர்மா, மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் யசோதரா ராஜ சிந்தியா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com