இன்டியன் வெல்ஸ்: பிரதான சுற்றில் யூகி பாம்ப்ரி

அமெரிக்காவில் நடைபெறும் இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் யூகி பாம்ப்ரி பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.
இன்டியன் வெல்ஸ்: பிரதான சுற்றில் யூகி பாம்ப்ரி

அமெரிக்காவில் நடைபெறும் இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் யூகி பாம்ப்ரி பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக தனது கடைசி தகுதிச்சுற்றில் அவர், சகநாட்டவரான ராம்குமார் ராமநாதனை 6-4, 6-2 என்ற செட்களில் வென்றார். இத்துடன் ராம்குமாரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள யூகி பாம்ப்ரி, தனது 3-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரதான சுற்றுக்கு யூகி முன்னேறுவது கடந்த 9 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். கடைசியாக யூகி பாம்ப்ரி கடந்த 2009-இல் மியாமி மாஸ்ட்ர்ஸ் போட்டியில் பிரதான சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
யூகி தனது முதல் பிரதான சுற்றில் பிரான்ஸ் நாட்டு தகுதிச்சுற்று வீரரான நிகோலஸ் மஹட்டை எதிர்கொள்கிறார். அதில் அவர் வெல்லும் பட்சத்தில், அடுத்த ஆட்டத்தில் உலகின் 12-ஆம் நிலை வீரரான பிரான்ஸின் லுகாஸ் புய்லேவுடன் மோதுவார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com