செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

 பிசிசிஐ விதிகளின் கீழ் அதன் தற்போதைய நிர்வாக அதிகாரிகளின் பதவிக்காலம் முடிந்துள்ளதால், அவர்கள் பதவி விலக வேண்டும் என வினோத் ராய், டயானா எடுல்ஜி ஆகியோர் அடங்கிய நிர்வாகக் குழு (சிஓஏ) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது 7-ஆவது நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.


 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது.


 ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பிரயன் விடோரியின் பந்துவீச்சு விதிகளுக்கு புறம்பான வகையில் இருப்பதாகக் கூறி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் வியாழக்கிழமை உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். நேபாளத்துக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அவர் விதிகளை மீறிய வகையில் பந்துவீசியதாக போட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில் பிசிசிஐ அதிகாரிகள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளதரி, அந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.


 சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை போட்டியில் இந்தியா தனது கடைசி ரவுண்ட் ராபின் சுற்றில் அயர்லாந்தை வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது.


 தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 'பி' அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.


 சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஜுவென்டஸ் மற்றும் மான்செஸ்டர் அணிகள் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com