இந்தியா, இலங்கை டி20: 19 ஓவர்களாக போட்டி குறைப்பு, டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இந்தியா, இலங்கை மோதும் 2-ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்தியா, இலங்கை டி20: 19 ஓவர்களாக போட்டி குறைப்பு, டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-ஆவது ஆட்டம் கொழும்பிலுள்ள பிரேமதாசா மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வி கண்டது இந்தியா. எனவே, இந்த ஆட்டத்தில் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி நடைபெறும் இடத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை வெளியான நிலையில், போட்டி தொடங்கும் சில மணித்துளிகளுக்கு முன்னதாக சிறிது நேரம் லேசான மழை பெய்தது.

இதனால் இப்போட்டி 19 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. இதில் 4 பந்துவீச்சாளர்கள் வரை 4 ஓவர்களும், 3 பந்துவீச்சாளர்களுக்கு 3 ஓவர்களும் பந்துவீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார். 2 போட்டிகளில் விளையாட தினேஷ் சண்டிமலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அணி கேப்டனாக திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அணிகள் விவரம்

இந்தியா

ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், விஜய் சங்கர், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட்.

இலங்கை

தனுஷ்கா குணதிலகா, குசல் மென்டிஸ், குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), உபுல் தரங்கா, டாசன் ஷனகா, திசர பெரேரா (கேப்டன்), ஜீவன் மென்டிஸ், அகிலா தனஞ்ஜெயா, நுவான் பிரதீப், சுரங்கா லக்மல், துஷ்மந்தா சமீரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com