ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் தனது முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் தனது முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
அதில் அவர் உலகின் முதல் நிலை வீராங்கனையான தைவானின் டாய் ஸு யிங்கிடம் 14-21, 18-21 என்ற செட்களில் தோல்வி கண்டார். இது, சாய்னா கடந்த 5 ஆண்டுகளில் டாயிடம் சந்திக்கும் 8-ஆவது தொடர் தோல்வியாகும். இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் டாய் ஸு விரைவாக முன்னேற, பின்னர் மீண்ட சாய்னா 10-10 என சமன் செய்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடி 14-14 என டாய் ஸு உடனேயே பயணித்தார். பின்னர் சாய்னா சற்று சறுக்க, அதைப் பயன்படுத்தி முன்னேறிய டாய் ஸு, அந்த செட்டை தனதாக்கினார்.
2-ஆவது செட்டிலும் பின்தங்கியிருந்த சாய்னா முதலில் 10-7, பின்னர் 16-11 என எதிர்பாராத வகையில் முன்னேறி வந்தார். பின்னடைவிலிருந்து மீண்ட டாய் ஸு 17-17 என முதலில் சமன் செய்து, பிறகு அந்த செட்டையும் வென்றார். 31 நிமிடங்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில் சாய்னா ரேலிக்களை தொடரச் செய்ய முயன்றும், டாயின் பலமான தாக்குதல் ஆட்டத்தால் தோற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com