மகத்தான இரவு: தினேஷ் கார்த்திக் பெருமிதம்

நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது...
மகத்தான இரவு: தினேஷ் கார்த்திக் பெருமிதம்

நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா-வங்கதேசம் அணிகள் முன்னேறின. கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது.

ரோஹித் சர்மா ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்றது இந்திய அணி. எனினும், அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி அணியை "த்ரில்' வெற்றி பெறச் செய்தார். 

ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், பவுண்டரி, சிக்ஸர்களுக்குப் பந்தை விரட்டினார். கடைசியாக ஒரு பந்தில் 5 ரன்கள் தேவை இருந்த நிலையில், சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்தார். தினேஷ் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 29 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் ஆனார். வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன். சாம்பியனான இந்திய அணிக்கு இலங்கை அதிபர் மைத்ரி பால சிறீ சேனா கோப்பையை வழங்கினார்.

இந்த வெற்றி குறித்து தினேஷ் கார்த்திக், ட்விட்டரில் கூறியதாவது: என் வாழ்நாளின் மகத்தான இரவு. நாட்டுக்காக வெற்றிக்கோட்டுக்கு அருகில் சென்றதை விடவும் வேறொரு சிறப்பு இருக்கமுடியாது என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com