மியாமி ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் யூகி முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார்.
மியாமி ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் யூகி முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெறும் இப்போட்டியில், உலகின் 107-ஆம் நிலை வீரரான பாம்ப்ரி தனது முதல் தகுதிச்சுற்றில், உலகின் 184-ஆம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ரென்úஸா ஆலிவோவை எதிர்கொண்டார். அதன் முடிவில் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் பாம்ப்ரி வென்றார்.
இதையடுத்து அவர் தனது 2-ஆவது தகுதிச்சுற்றில், உலகின் 133-ஆம் நிலையில் இருக்கும் ஸ்வீடனின் எலியாஸ் ஒய்மெரை சந்திக்கிறார். அவரை வெல்லும் பட்சத்தில் மியாமின் ஓபனின் பிரதான சுற்றுக்கு பாம்ப்ரி தகுதிபெறுவார்.
முன்னதாக பாம்ப்ரி, சமீபத்தில் நிறைவடைந்த இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரதான சுற்றின் 2-ஆவது ஆட்டம் வரை முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மியாமி ஓபனில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான ராம்குமார் ராமநாதன் தனது முதல் தகுதிச்சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். அதில் அவர் அமெரிக்காவின் மைக்கெல் மோவிடம் 6-7(4/7), 4-6 என்ற செட்களில் வீழ்ந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com