டி20: இந்திய மகளிர் அணி நல்ல தொடக்கம்!

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியுள்ளது...
டி20: இந்திய மகளிர் அணி நல்ல தொடக்கம்!

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. 

இந்திய அணியை பொருத்த வரையில் சமீபத்தில் இதே ஆஸ்திரேலிய அணியிடம் ஒருநாள் தொடரை 0-3 என முழுமையாக இழந்துள்ளது. எனினும், அதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 90  ரன்கள் எடுத்துள்ளது. மந்தனா 30 பந்துகளில் அரை சதத்தை எட்டியுள்ளார். மிதாலி ராஜ் 18 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com