முகமது ஷமிக்கு 'கிரேட் பி' ஒப்பந்தம் வழங்க பிசிசிஐ முடிவு!

மனைவி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள முகமது ஷமிக்கு கிரேட் பி ஒப்பந்தம் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
முகமது ஷமிக்கு 'கிரேட் பி' ஒப்பந்தம் வழங்க பிசிசிஐ முடிவு!

முகமது ஷமி தன்னை ஏமாற்றுவதாகவும், அவரால் தாம் குடும்ப வன்முறைக்கு ஆளாகியிருப்பதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில், ஷமி-ஹசின் இடையே நிகழ்ந்ததாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் பதிவு வெளியானதாக கூறப்படுகிறது. அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் என்பவரிடம் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த அலிஷ்பா என்ற பெண் மூலமாக முகமது ஷமி பணம் பெற்றதாக ஜஹான் குற்றம்சாட்டினார். 

இதையடுத்து, முகமது ஷமி-ஹசின் ஜஹான் இடையே நிகழ்ந்ததாக கூறப்படும் உரையாடல் பதிவு தொடர்பாக பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசியு) விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு அறிவுறுத்தியது.

இதுதொடர்பான அறிக்கையை பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசியு) தலைமை அதிகாரி நீரஜ் குமார், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழுவிடம் வியாழக்கிழமை சமர்பித்தார்.

எனவே முகமது ஷமி, அடுத்த சீசனுக்கான ஊதிய ஒப்பந்தத்தில் 'கிரேட் பி' அடிப்படையில் பிசிசிஐ-யால் ஒப்பந்தம் செய்யப்படுகிறார். இதன்மூலம் அவருக்கு ஆண்டு வருமானமாக ரூ.3 கோடி வழங்கப்படும். இந்த அறிவிப்பை பிசிசிஐ வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com