சென்னையின் எஃப்சி வெற்றிக்கு வித்திட்ட ஜேஜே லால்பெக்லுவா!

உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு, கால்பந்து. பல நாடுகளில் மிகவும் ரசித்து விளையாடப்படும் கால்பந்துக்கு இந்தியாவிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர்.
சென்னையின் எஃப்சி வெற்றிக்கு வித்திட்ட ஜேஜே லால்பெக்லுவா!

உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு, கால்பந்து. பல நாடுகளில் மிகவும் ரசித்து விளையாடப்படும் கால்பந்துக்கு இந்தியாவிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர்.
மேற்கு வங்கம், கோவா, கேரளம் ஆகிய மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மணிப்பூர், மிúஸாரம், மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் இந்த விளையாட்டு மிகவும் பிரபலம்.
நம் ஊரில் சிறிய சந்து கிடைத்தாலும், அதில் கிரிக்கெட் விளையாடுவோம் அல்லவா! அதுபோல், வடகிழக்கு மாநிலங்களில் சிறிய அளவிலான மைதானம் கிடைத்துவிட்டால் இரு புறமும் வலையைக் கட்டி கால்பந்து விளையாடத் தொடங்கிவிடுவார்கள்.
இந்தியாவில், கிரிக்கெட்டுக்கென இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்ற பெயரில் 20 ஓவர் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதைப்போல, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கால்பந்துக்கென இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) என்ற பெயரில் ஆண்டுதோறும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
ஐபிஎல்லைப் போன்றே இதிலும் உள்ளூர் வீரர்கள் பலரும் சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், நமது வீரர்களின் ஆட்டத்திறன் மேலும் அதிகரிக்கிறது.
சமீபத்தில் நிறைவடைந்த ஐஎஸ்எல் போட்டியின் 4-ஆவது சீசனில் சென்னையின் எஃப்சி அணி சாம்பியன் ஆகியது. இறுதி ஆட்டத்தில் சென்னை 3-2 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான பெங்களூரு எஃப்சியை வீழ்த்தி 2-ஆவது முறையாக மகுடம் சூடியது. இந்த சீசனில் லீக் சுற்று, அரையிறுதி, இறுதி ஆட்டம் என சென்னை அணி மொத்தம் 31 கோல்களைப் பதிவு செய்தது.
அதிகபட்சமாக, அந்த அணியின் 27 வயது வீரரான மிúஸாரமைச் சேர்ந்த ஜேஜே லால்பெக்லுவா ஃபனாய் மொத்தம் 9 கோல்களைப் பதிவு செய்து, அதிக கோல்களைப் பதிவு செய்த சென்னை வீரர்களில் முதலாமவர் என்ற இடத்தை அலங்கரித்தார்.
கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட சில விளையாட்டுகளில் குழு முயற்சியால் மட்டுமே ஓர் அணி வெற்றியை ருசிக்க முடியும் என்றாலும் ஒரு சில விளையாட்டுகளில் தனிப்பட்ட வீரர்கள் சற்று ஆதிக்கம் செலுத்துவர். அந்த வகையில் சென்னையின் எஃப்சி வெற்றிக்கு வித்திட்டவர் ஜேஜே லால்பெக்லுவா என்று கூறினால் மிகையல்ல.
யார் இந்த ஜேஜே?: மிúஸாரமின் நத்தியால் என்ற குக்கிராமத்தில் கடந்த 1991-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி பிறந்தார் ஜேஜே. அவரது தந்தையும், சகோதரரும் உள்ளூர் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடியவர்கள். இவரது உறவினர் ஒருவரும் சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடியவர் தான். இப்படி கால்பந்தை நேசிக்கும் குடும்பத்தில் பிறந்த ஜேஜேவை அந்த விளையாட்டு கவர்ந்திழுக்கவில்லை என்றால்தான் நாம் ஆச்சரியம் கொள்ள வேண்டும்.
அவரது தந்தை கால்பந்து விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, உள்ளூர் அணியில் முதல் முறையாக பங்கேற்றார் ஜேஜே. ஆரம்பத்தில் தனது இளைய மகனும் கால்பந்தையே வாழ்க்கையாகத் தேர்வு செய்வதற்கு பெற்றோர் தயங்கினர்.
எனினும், மிúஸாரமில் நடைபெற்ற போட்டி ஒன்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேஜேவுக்கு 19 வயதுக்குள்பட்டோருக்கான மாநில கால்பந்து அணியில் வாய்ப்பு கிடைத்தது.
இந்திய அணியில் இடம்: படிப்படியாக முன்னேறிய ஜேஜே, 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு அவரது வாழ்க்கையில் ஏறுமுகம் மட்டுமே இருந்தது. ஐ-லீக் உள்பட, நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு கால்பந்து போட்டிகளில் விளையாடிவரும் ஜேஜேவை, கடந்த 2011-இல் சென்னையின் எஃப்சி அணி சுவீகரித்துக் கொண்டது.
அந்த சீசனில் 13 ஆட்டங்களில் விளையாடி 4 கோல்களைப் பதிவு செய்ததுடன், சீசனில் அதிக கோல்களைப் பதிவு செய்த இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜேஜே பெற்றார். 2016-ஆம் ஆண்டின் சிறந்த வீரராக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அவரைத் தேர்வு செய்தது.
ஐஎஸ்எல் 2-ஆவது சீசனில் (2015) 6 கோல்களை சென்னைக்காகப் பதிவு செய்தார். அந்த சீசனில் சென்னையின் எஃப்சி முதல் முறையாக சாம்பியன் ஆனது. 2016-இல் 3 கோல்களை சென்னைக்காக பதிவு செய்த ஜேஜே, நடப்பு சீசனில் (2017-18) 20 ஆட்டங்களில் பங்கேற்று 9 கோல்களைப் பதிவு செய்துள்ளார்.
இதுவரை நடைபெற்றுள்ள 4 ஐஎஸ்எல் சீசனையும் சேர்த்து அதிக கோல்களை பதிவு செய்த இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ள ஜேஜே (22 கோல்கள்), இந்த சீசனில் 1,705 நிமிடங்கள் களத்தில் நின்று 2 நெட் பகுதிகளை நோக்கி ஓடியும், வியர்வைத் துளிகளை சிந்தியும் சென்னை அணி 2-ஆவது முறையாக மகுடம் தறிக்க முன்கள வீரராக முக்கியப் பங்காற்றியுள்ளார் என்றால் அதில்
சற்றும் சந்தேகமில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com