செளம்யஜித் மீது பலாத்கார புகார்

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் செளம்யஜித் கோஷ் மீது பலாத்கார புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் செளம்யஜித் கோஷ் மீது பலாத்கார புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு, காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்தும் நீக்கம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
 எனினும், அந்தப் பெண்ணுடனான தனது உறவை முடித்துக்கொண்டதாகக் கூறியுள்ள செளம்யஜித், சம்பந்தப்பட்ட பெண் தன்னை மிரட்டி வருவதாகத் குற்றம்சாட்டியுள்ளார். 18 வயதான அந்தப் பெண், மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 இதனிடையே, செளம்யஜித் மீது தீவிரமான புகார் அளிக்கப்பட்டுள்ளதால் காமன்வெல்த் அணியில் இருந்து அவரை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், அவருக்குப் பதிலாக ரிசர்வ் வீரர் சனில் ஷெட்டியை அணியில் சேர்க்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளன செயலர் எம்.பி.சிங் கூறியுள்ளார். இந்நிலையில், செளம்யஜித்துக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க காமன்வெல்த் விளையாட்டுச் சம்மேளனம் அனுமதி அளிக்காது என இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com