போல்ட், செளதி சீறல்: இங்கிலாந்து சறுக்கல்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 20.4 ஓவர்களில் 58 ரன்களுக்கு சுருண்டது. நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட்,
போல்ட், செளதி சீறல்: இங்கிலாந்து சறுக்கல்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 20.4 ஓவர்களில் 58 ரன்களுக்கு சுருண்டது. நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட், டிம் செளதி ஆகிய இரண்டே பேர் இங்கிலாந்தின் ஒட்டுமொத்த விக்கெட்டுகளையும் சரித்தனர்.
 ஆக்லாந்தில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில்
 பந்து வீச தீர்மானித்தது. பேட் செய்த இங்கிலாந்தில் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தன. கிரெய்க் ஓவர்டன் மட்டும் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 தொடக்க வீரர் அலாஸ்டர் குக் 5, உடன் வந்த ஸ்டோன்மேன் 11 ரன்களில் நடையைக் கட்டினர். பின்னர் வந்தவர்களில் டிஜே மலான் 2, கிறிஸ் வோக்ஸ் 5, ஜேம்ஸ் ஆன்டர்சன் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினர்.
 கேப்டன் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி, ஸ்டுவர்ட் பிராட் ஆகியோர் டக் அவுட்டாகினர். அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சியால், இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் இரவு உணவு இடைவேளைக்கு முன்பாகவே முடிந்தது.
 நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 32 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் சாய்க்க, எஞ்சிய 4 விக்கெட்டுகளை 25 ரன்களுக்கு பகிர்ந்துகொண்டார் டிம் செளதி.
 நியூஸிலாந்து 175/3: இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து முதல்நாள் முடிவில் 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 91, ஹென்ரி நிகோலஸ் 24 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.
 முன்னதாக, தொடக்க வீரர் ஜீத் ராவல் 3, உடன் வந்த டாம் லதாம் 26 ரன்கள் சேர்க்க, ராஸ் டெய்லர் 20 ரன்களுக்கு நடையைக் கட்டியிருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆன்டர்சன் 2, ஸ்டூவர்ட் பிராட் 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
 6-ஆவது குறைந்தபட்சம்
 இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் அடித்துள்ள 58 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸில் அந்த அணியின் 6-ஆவது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். அந்த அணியின் மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் 45. அந்த ஸ்கோரை 1887-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் எடுத்திருந்தது.
 400 விக்கெட்
 நியூஸிலாந்து இன்னிங்ஸில் டாம் லதாமின் விக்கெட்டை இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார். இது, டெஸ்ட் போட்டியில் அவரது 400-ஆவது விக்கெட்டாகும். இதையடுத்து, டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-ஆவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஸ்டூவர்ட் பிராட் பெற்றார். இந்தச் சாதனையை அவர் தனது 115-ஆவது டெஸ்டில் எட்டியுள்ளார்.
 டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் ஜேம்ஸ் ஆன்டர்சன் 523 விக்கெட்டுகளுடன் (134 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com