உலக குத்துச்சண்டை தொடர்: இந்தியா-கஜகஸ்தான் இன்று மோதல்

உலக குத்துச்சண்டை தொடர் போட்டியில், இந்தியா-கஜகஸ்தான் அணிகள் மோதும் சுற்றுகள் ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

உலக குத்துச்சண்டை தொடர் போட்டியில், இந்தியா-கஜகஸ்தான் அணிகள் மோதும் சுற்றுகள் ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
 இதில் இந்தியாவின் "இன்டியன் டைகர்ஸ்' அணியும், கஜகஸ்தானின் "அஸ்தானா அர்லான்ஸ்' அணியும் 5 எடைப் பிரிவுகளில் மோதுகின்றன.
 இந்தியாவின் சார்பில் ஷியாம் குமார் ககாரா (49 கிலோ பிரிவு), எடாஷ் கான் முகமது (56 கிலோ), தீரஜ் (64 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சஞ்ஜீத் (91 கிலோ) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 முறையே அவர்களை எதிர்த்து கஜகஸ்தானின் ஸýசுபோவ் டெமிர்டாஸ் (49 கிலோ), கோஷ்செகுலோவ் நுர்சுல்தான் (56 கிலோ), மிஸிதோவ் தில்முராத் (64 கிலோ), அமன்குல் அபில்கான் (75 கிலோ), டர்லான்பெகோவ் அபில்கைர் (91 கிலோ) ஆகியோர் மோதுகின்றனர்.
 உலக குத்துச்சண்டை தொடரில் இந்த ஆண்டு முதல் மீண்டும் இணைந்துள்ள இந்திய அணி, தனது சொந்த மண்ணில் களம் காண்பது இது முதல் முறையாகும். முன்னதாக வெளிநாட்டில் நடைபெற்ற 2 மோதல்களில் ஒன்றில் ஏற்கெனவே கஜகஸ்தானிடம் வீழ்ந்துள்ளது இந்தியா. மற்றொரு மோதலில் ரஷியாவின் பேட்ரியாட் பாக்ஸிங் அணியிடம் வீழ்ந்துள்ளது. அந்த இரண்டிலுமே 1-4 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.
 இந்த 3-ஆவது மோதலின் மூலமாக முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. ஒரு எடைப் பிரிவுக்கான மோதலில், தலா 3 நிமிடங்கள் என்ற கணக்கில் 5 சுற்றுகள் நடைபெறும். இந்தப் போட்டியானது ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும் வாய்ப்பாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா சொந்த மண்ணிலேயே அடுத்ததாக ரஷியா மற்றும் சீனா அணிகளை எதிர்கொள்கிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com