துளிகள்...

மகளிர் முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில், காயமடைந்த ராஜேஷ்வரி கெய்க்வாட்டுக்கு பதிலாக ராதா யாதவ் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

* மகளிர் முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில், காயமடைந்த ராஜேஷ்வரி கெய்க்வாட்டுக்கு பதிலாக ராதா யாதவ் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
* சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் கேரளம் 6-0 என்ற கணக்கில் மணிப்பூரையும், மகாராஷ்டிரம் 2-1 என்ற கணக்கில் சண்டீகரையும் வீழ்த்தின.
* உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்றின் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றது.
* மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
* காமன்வெல்த் போட்டிக்காக பயணிக்கும் இந்திய அணியில் வீரர்/வீராங்கனைகளின் பெற்றோர் உள்ளிட்டோர் இடம்பெற விளையாட்டு அமைச்சகம் தடை விதித்துள்ளதற்கு இந்திய தேசிய ரைஃபிள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com