20 பந்துகளில் சாஹா அதிரடி சதம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹா, கிளப்புகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட்டி போட்டி ஒன்றில் 20 பந்துகளில் அதிரடியாக சதமடித்து அசத்தியுள்ளார்.
20 பந்துகளில் சாஹா அதிரடி சதம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹா, கிளப்புகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட்டி போட்டி ஒன்றில் 20 பந்துகளில் அதிரடியாக சதமடித்து அசத்தியுள்ளார்.
 கொல்கத்தாவில் கிளப்புகளுக்கு இடையேயான ஜேசி முகர்ஜி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில், மோகன் பகன்-பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் (பிஎன்ஆர்) அணிகள் மோதிய ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் மோகன் பகன் அணிக்காக சாஹா இவ்வாறு சதமடித்தார்.
 152 ரன்களை சேஸ் செய்து ஆடிய மோகன் பகன் அணியில், சாஹா 20 பந்துகளில் 14 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள், 2 சிங்கிள்கள் அடித்து மொத்தம் 102 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரே அணி வெற்றி பெறவும் உதவினார்.
 பிஎன்ஆர் பந்துவீச்சாளர் அமன் பிரசாத் கடைசியாக வீசிய ஓவரில் 6 பந்துகளிலும் சாஹா சிக்ஸர் விளாசினார். இதுதவிர அமன் வீசிய ஒரு "வைடு' பந்தால் கூடுதலாக ஒரு ரன் கிடைத்தது. அந்த ஓவரில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதத்தை எட்டினார் சாஹா.
 இதுகுறித்து பின்னர் அவர் கூறுகையில், "இது சாதனையாக இருக்குமா எனத் தெரியாது. ஐபிஎல் போட்டி எதிர்வரும் நிலையில், பல்வேறு முறைகளில் ஷாட்களை இதன்மூலமாக பழகிக் கொண்டேன்' என்றார்.
 கலிகாட் போன்ற தகுதிவாய்ந்த மைதானத்தில், முதல் டிவிஷன் அணியான பிஎன்ஆர்-க்கு எதிராக சாஹா அடித்த இந்த சதம் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஐபிஎல் சீசனில் சாஹா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
 அதிகாரப்பூர்வ சாதனை: அதிகாரப்பூர்வமான போட்டிகளை கணக்கில் கொண்டால், ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2013-ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 30 பந்துகளில் (8 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள் உள்பட) சதமடித்ததே சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com